இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஒரு பெரும் மோதல்

717

 

இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஒரு பெரும் மோதல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக வெளிநாட்டினருடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை செய்ததாகக் கூற்றஞ்சாட்டி அங்கு வந்த ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தக் குழுவினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே இந்த மோதல் சம்பவம் நடந்ததாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர் விமல் வீரவன்ஸவின் ஆதரவாளர்களே அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, தமது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஐ.தே.கவினர் கூறியுள்ளனர். இது குறித்து விமல் வீரவன்சவின் தரப்பு கருத்துக்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

இவை குறித்த காணொளி.

SHARE