இலங்கை அர­சாங்கம் மாகாண சபைக்­கான அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வில்லை. பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு கவனம் செலுத்­த­வில்லை. இந்­தி­யா­வுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாது எதிர்ம­றை­யான செயற்­பாட்­டி­லேயே இலங்கை அரசு ஈடு­பட்டு வரு­கி­றது-திருமலைநவம்.

557


தமிழ்த்­தே­சிய  கூட்­ட­மைப்பின் இந்­தி­யா­வுக்­கான விஜ­யமும்  அதனால் எதிர்ப்­பார்க்­கப்­பட்ட  பெறு­ம­தி­மிக்க   எதிர்ப்­பார்ப்­பு­களும்   எந்­த­வ­ள­வுக்கு நிறைவு கொண்­டி­ருக்­கி­றது என்­பது பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்கள் தற்பொழுதுமுன்வைக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றன.

கூட்­ட­மைப்­பி­னரின் அறிக்­கை­களின் படியும் அவர்கள் பத்­தி­ரி­கை­க­ளுக்கு விடுத்­தி­ருக்கும் செய்­தி­க­ளையும் அலசி ஆராய்ந்து பார்க்­கின்ற போது இந்­தி­யா­வுக்­கான தமது விஜயம் எதிர்ப்­பார்த்­ததை விட பாரிய வெற்­றியைக் கண்டிருக்கிறது என அவர்­களால் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை  வட கிழக்கு மக்கள் மற்றும் புலம் பெயர்ந்­த­வர்கள் கூட்­ட­மைப்பு தவிர்ந்த ஏனைய கட்­சியின் தலை­வர்கள் பார்­வையில் இந்­திய விஜயம் எதிர்­பார்த்த இலக்கை அடை­ய­வில்­லையா? என்ற சந்­தே­கத்தை கிளப்பி விட்­டி­ருக்­கி­றது. இன்­னொருபுறம் ­பார்க்கப் போனால் இலங்கை அர­சாங்­கத்தின் பக்கம் கடும் விச­னத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­ப­தையும் காண முடி­கி­றது.

இந்­திய காங்­கிரஸ் கட்சி ஆட்­சி­யி­லி­ருந்த  காலத்தில் எதிர்ப்­பார்த்த   எதிர்­பார்ப்பை விட நரேந்­திர மோடியின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் வரவை மிக ஆவ­லோடும் அக்­க­றை­யோடும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்­தி­ருந்­தார்கள் என்­பதும் மறுத்து விட முடி­யாத உண்மை. காரணம்.

இந்­திய ஆட்சி மாற்றம்   ஒன்றின் மூலமே இலங்கை இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்றை பெற்றுக்­கொள்ள முடி­யு­மென்ற உள்­ளார்ந்த நம்­பிக்­கை­யொருபுறமாகவும்   சர்­வ­தேச அர­சியல்  சது­ரங்­கத்தில்   இந்­தி­யாவை மீறி   ஏதும் ஆகி விட   முடி­யாது என்ற பயமும்   இந்த எதிர்ப்­பார்ப்­புக்கு கார­ணங்­க­ளாக இருந்­தன.

1991 ஆம் ஆண்டு இந்­திய முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி படு­கொலை செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து இலங்கை தமிழ் மக்­களின் இனத்­துவம் சார்ந்த அர­சியல் போக்­கு­களில் இந்­தியா கொண்­டி­ருந்த நிலைப்­பாடு கொள்கை வகுப்பு மாறிக் கொண்­டது என்­பதும் உண்­மையே.

இதன் கார­ண­மா­கவே காங்­கிரஸ் ஆட்சி  இந்­தி­யாவில் நிலை­கொண்­டி­ருக்­கு­மட்டும் இலங்கை இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் அது அக்­கறை காட்டப் போவ­தில்­லை­யென்ற அவ­நம்­பிக்­கைகள் இலங்கை தமிழ் மக்கள் மத்­தியில் உள்­ளூர நிலை கொண்­டி­ருந்­தன. அதை நிரூ­பிக்கும் வகை­யி­லேயே கூட்­ட­மைப்­புக்கும் முன்­னைய அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லான சந்­திப்­புக்கள் பேச்­சு­வார்த்­தைகள் இருந்­தி­ருக்­கின்­றன.

மன்­மோகன் சிங் தலை­மை­யி­லான இந்­திய அர­சாங்­கத்தின் ஆட்சி பீடம் அமைக்­கப்­பட்­டி­ருந்த போதும் சக­ல­வற்­றையும்  தீர்­மா­னிக்கும் மறைகரமொன்று இந்­திய அர­சி­யலில் வலுக்­கொண்­டி­ருந்த கார­ணத்­தினால் தான் இந்­திய அரசாங்­கத்­துடன் அதன் தலை­வர்கள் ராஜ­தந்­தி­ரிகள் ஆகி­யோ­ருடன் நடத்­தப்­பட்ட   எல்லாப் பேச்­சு­வார்த்­தை­களும்   சந்­திப்­புக்­களும் கூட்­ட­மைப்பைப்   பொறுத்­த­வரை  கன­தி­யான பலனைத் தர­வில்லை. ஆனால் ஒப்­புக்கு வெற்றி கண்டுள்­ளது  என்று பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டதே தவிர உண்மை அவ்­வாறு இருக்­க­வில்லை.

முள்­ளி­வாய்க்கால் போரை முடி­வுக்கு கொண்டு வந்த பங்­கா­ளி­களில் பிர­தான பாத்­திரம் ஏற்று நடித்த இந்­திய அர­சாங்கம் 13 ஆவது அர­சியல் சீர்­தி­ருத்­தத்தை இலங்கை அர­சாங்கம் வலுக் கொண்­ட­தாக ஆக்க வேண்டும்.

அதற்கு அப்பால் சென்று  ஞாய பூர்­வ­மான தீர்வை வழங்க வேண்­டு­மென அடிக்­கடி அல்­லது பேசப்­ப­டு­கிற   சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் கூறி   வந்­தி­ருக்­கி­றதே தவிர உரிய அழுத்­தத்தை இலங்கை அர­சுக்கு அது கொடுக்­க­வு­மில்லை வலியுறுத்தவுமில்­லை­யென்­ப­தே­யுண்மை.

இந்­த ­உண்மை பொது­வா­கவே   எல்­லோ­ராலும் அறி­யப்­பட்ட உண்­மை­யென்­பதும் தெரிந்த விட­யமே. 1983ஆம் ஆண்டு காலப்   பகு­தி­யி­லி­ருந்து இலங்கை இனப் பிரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தியா எத்­த­கைய முக்­கி­ய­மான பாத்திரத்தை வகித்துக் கொண்­டது  என்­பதும்     அதன் போக்கில் 1991 ஆம் ஆண்டு என்ன முறிவைக் கொண்டு வந்­தது என்­பதும்   சுமார் 23 வரு­டங்கள் (1991 – – 2014) இந்­தி­யாவின் நிலை­சார்ந்த போக்கு எவ்­வாறு இருந்­தது என்­பதும் சிறு­கு­ழந்தை கூட கற்றுக் கொள்ளக் கூடிய எளி­மை­யான வர­லாற்றுப் போக்­காகும்.

இது தவிர இந்­தி­யாவின் எந்த நிலைப்­பாடும் குறிக்­கப்­பட்ட  கலண்டர் ஆண்­டு­களில்   இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு சார்­பா­கவோ  அல்­லது  ஈழத் தமிழர் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வொன்று பெற்றுத் தர வேண்­டு­மென்ற குறிக்கோள்கொண்ட­தாக இருக்­க­வில்­லை­யென்­ப­தற்கு அடை­யா­ள­மா­கவே 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்­கெ­தி­ராக அமெ­ரிக்­காவால் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இந்­தியா இலங்­கைக்கு சார்­பாக நடந்து கொண்­டதும் மறு ஆண்டு (2013) தமி­ழ­கத்தின் அதிர்­வ­லைகள் கார­ண­மாக இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்­ததும் பழை­ய­கு­ருடி கதவைத் திற­வடி என்­பது போல் மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடு­நிலை வகித்துக் கொண்­டதும் ஆன நிகழ்­வுகள் படம் போட்டுக் காட்­டு­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு விமர்­ச­ன­ம­யப்­பட்ட   சூழ்­நி­லையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்­தியப் பயணம் அமைந்­தி­ருக்­கின்­றது. இலங்கை இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இந்­தியா கூடு­த­லான கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்­கையை   சம்பந்தன் தலை­மை­யி­லான குழு­வினர்   இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிர­தமர்   நரேந்­திர மோடி   ஆகி­யோ­ரிடம் கவ­ன­மாக வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள்.

இலங்கை அர­சாங்கம் மாகாண   சபைக்­கான அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு  தயா­ரா­க­வில்லை. பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு கவனம் செலுத்­த­வில்லை. இந்­தி­யா­வுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாது எதிர்ம­றை­யான செயற்­பாட்­டி­லேயே இலங்கை அரசு ஈடு­பட்டு வரு­கி­றது.

எனவே இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண இந்­தியா கடு­மை­யான முயற்சி எடுக்க வேண்டும் என இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­ரிடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விட்­டது. அத்­துடன் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்த வேளையில் பின்­வரும் கோரிக்­கையை விடுத்­தி­ருந்­தது.

வடக்கு – கிழக்கு   தமிழர் தாயகம்   தமி­ழரின் இந்த பூர்­வீக நிலங்கள்   இன்னும் ஐந்து வரு­டங்­களில்   இலங்கை அரசால் முற்­றாக சிதைக்­கப்­ப­டலாம் என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது. ஏன் எனில் அரசின் தற்­போ­தைய நட­வ­டிக்­கைகளை இதனையே பிர­தி­ப­லிக்­கின்­றன.

இவ்­வ­கை­யான இலங்­கையின் திட்­ட­மிட்ட இன­வொ­டுக்கல் நட­வ­டிக்­கைகளை இந்­தியா தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உடந்­தை­யாக உயர் குழு­வொன்றை இந்­தியா இலங்­கைக்கு அனுப்பி வைக்க வேண்­டு­மென பாரதப் பிர­த­ம­ரிடம் கூட்­ட­மைப்­பினர் கோரிக்­கை­யாக விடுத்­தி­ருந்­தனர்.

கூட்­ட­மைப்­பினால் விடுக்­கப்­பட்ட இக் கோரிக்­கை­களை இந்­திய அரசும் அங்­குள்ள ராஜ­தந்­தி­ரி­களும் ஏற்றுக் கொண்­டார்­களா இல்­லையா? கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­மென வாக்­கு­றுதி அளித்­துள்­ளார்களா இல்­லையா? என்­ப­தெல்லாம் வெளி­வ­ராத  ரக­சி­யங்­க­ளாக  இருக்­கின்ற போதும்   இந்­திய விஜயம்   இலங்கை  அர­சாங்­கத்தை சிறி­ய­ளவு கலங்க வைத்­துள்­ளது என்­பது கசப்­பான உண்­மையே.

இந்­திய விஜயம் பற்றி தனது விமர்­சன பூர்­வ­மான கருத்தைத் தெரி­வித்­தி­ருந்த அர­சியல் விமர்­ச­கரும் முன்னாள் சிரேஷ்ட ராஜ­தந்­தி­ரி­யு­மான கலா­நிதி தயான் ஜெய­தி­லக்க பின்­வ­ரு­மாறு தெரி­வித்­தி­ருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்­தி­யுள்­ள­மை­யா­னது கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு கிடைத்­துள்ள இரா­ஜ­தந்­திர வெற்­றி­யாகும். அத்­துடன் சீனப் பீதியால் இலங்­கையை மோடி அழுத்­த­மாட்டார் என இலங்கை அரசு போட்ட கணக்கும் தற்­பொ­ழுது பிழைத்து விட்­டது என தயான் ஜயதிலக்க குறிப்­பிட்­டி­ருந்தார்.

குறிப்­பிட்ட இந்த விமர்­ச­னத்தின் அடிப்­ப­டையில் நோக்­கு­கின்­ற­போது கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­ய­மா­னது இலங்­கை­ அரசாங்­கத்­துக்கு கடும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­ப­தற்கு இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் சார்பில் கூறப்­பட்டு வரும் கருத்­துக்­களே சாட்­சி­யங்­க­ளா­கி­ன்றன. ஜனா­தி­பதி  மஹிந்த ராஜபக் ஷ கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­யத்தை மிகக் கடும் போக்கில் பார்த்­துள்ளார் என்­ப­தற்கு அவரின் சீற்ற வார்த்­தை­களே உதா­ர­ண­மா­கி­றது.


சம்­பந்­தனும் அவ­ரது கட்­சி­யி­னரும் எங்கு சென்­றாலும் இறு­தியில் என்­னி­டமே வர­வேண்டும். என்­னிடம் வரா­விட்டால் அவர்­களால் தீர்­வுகள் குறித்து பேச­மு­டி­யாது என அடித்து கூறி­யுள்ளார். அது­மட்­டு­மன்றி தனது கடும் அதிருப்தியை பிர­தி­நிதி ஒருவர் மூல­மாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னிடம்  ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது ஒரு­புறம் இருக்க அர­சாங்­கத்தின் சார்பில் கருத்து தெரி­வித்­தி­ருந்த அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த போன்­ற­வர்­களும் கடும் போக்கில் விமர்­சித்­துள்­ளனர். ஆளும் கட்­சியின் பிர­தம கொர­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் பற்றி இவ்­வா­றா­ன­தொரு கருத்தை நாக்கு கூசாமல் கூறி­யி­ருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பொய்­யான முறைப்­பா­டு­களை செய்­துள்­ளமை தொடர்பில் அர­சாங்கம் ஆச்­ச­ரி­ய­ம­டை­ய­வில்லை. காரணம் வர­லாறு முழு­வதும் கூட்­ட­மைப்­பினர் இவ்­வாறே செயற்­பட்டு வந்­துள்­ளனர் என தினேஷ் குண­வர்த்­தன சாடி­யி­ருந்தார்.

அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் அர­சாங்­கத்தை மீறி­யாரும் செயற்­பட முடி­யாது. இந்­தி­யா­வுக்கு இது பொருந்­து­மென அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கடு­மை­யான தொனியில் கூறி­யி­ருந்­த­துடன் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு துணைப்­போன தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் இந்­தியா இணங்­கு­வது அதிர்ச்­சி­ய­ளிக்­கின்­றது என அவர் மேலும் தெரி­வித்­தி­ருந்தார்.

கூட்­ட­மைப்பின்  இந்­திய விஜ­ய­மா­னது  இரண்டு விட­யங்­களை இந்­தி­யா­வுக்கு   எடுத்துச் சொல்லும்   நோக்­கத்­துக்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக வரை­ய­றுத்து கொண்டு பார்ப்­போ­மாகில், ஒன்று இலங்­கையின் இன்­றைய யதார்த்த நிலை, மற்­றொன்று அர­சியல் தீர்வும் அது­சார்ந்த இழுத்­த­டிப்­பு­க­ளுக்­கு­மென்று அர்த்­தப்­ப­டுத்­திக்­கொள்­ளலாம்.

இன்­றைய அர­சியல் யதார்த்த நிலைகள் பற்றி சம்­பந்தன் விளக்­கு­கையில் ஒரு ஆழ­மான உண்­மையை எடுத்துக் கூறி­யி­ருந்தார். அது யாதெனில், வட­கி­ழக்கு தமிழர் நாயகம் என்­பது இன்னும் ஐந்து வரு­டங்­களில் இன்­றைய அரசால் முற்­றாக சிதைக்­கப்­ப­டலாம். என்­ப­தனை தெளி­வாக எடுத்துக் காட்­டி­யமை.

இன்­றைய வட­கி­ழக்கின் யதார்த்த நிலை­யென்ன என்­பது சொல்­லிப்­பு­ரி­ய­வைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இரா­ணுவ குடி­யி­ருப்­புக்கள், படை­முகாம் விஸ்­த­ரிப்பு, புனித பூஜா திட்டம், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலயம், சுற்­று­லாத்­துறை, தொல்­பொருள் ஆய்வு, வனப்­ப­ரி­பா­லனம், தேசிய பாது­காப்பு என்ற வாய்ப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் வட­கி­ழக்­கி­லுள்ள பெருந்­தொ­கை­யான நிலங்கள் சுவீ­கா­ரத்­துக்கு உள்ளாக்கப்படுகின்றனஇவை தவிர பள்­ளி­வா­சல்கள் தேவா­ல­யங்கள் கோயில்கள் என்ற எதிர்­மறை அழிப்­புக்கள் வாரம் தவ­றாமல் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

அண்­மையில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கரு­ம­லை­யூற்று, புல்­மோட்டை, கன்­னியா, அரி­சி­மலை அளப்­புக்கள் எல்லாம் இந்த வாய்­பாட்­டுக்கு உட்­பட்­ட­வைதான். ஆனால் இவை பற்­றி­யெல்லாம் இந்­தியா அறிந்து வைத்திருக்கவில்­லை­யென்று கூறு­வ­தற்­கு­மில்லை.

அண்­மையில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­துக்கு முதல்­முதல் விஜயம் செய்­தி­ருந்த    இந்­திய உயர் ஸ்தானி­க­ரிடம் சம்பூர் மக்கள்   தமது ஆதங்­கத்தை அள்­ளிக்­கொட்ட காத்­தி­ருந்­தார்கள். இந்­தி­யாவின் அனல்மின் நிலையம் என்ற அவ­சர  திட்­டத்­துக்குள்  தங்கள் பூர்­வீக நிலங்கள் தாரை வார்க்­கப்­பட்­டுள்­ளன என எடுத்துக் கூறக்­காத்­தி­ருந்த போதிலும் மிக சாது­ரி­ய­மாக அந்த சந்­திப்­புக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை.

சம்பூர் மக்­களின் உண்மை நிலை­யென்­பது இந்­தியா அறி­யா­த­வொரு விட­ய­மல்ல, உயர்ஸ்­தா­னி­க­ருக்கு தெரி­விக்­கப்­ப­டாத ஒரு விவ­கா­ர­மு­மில்லை.

இங்கு சீனா குடி­வந்­து­விடும் என்ற மாயைக் காரணம் காட்­டப்­பட்டு இந்­தி­யா­வுக்கு தாரை வார்த்து கொடுக்­கப்­பட்­ட­தாக வதந்­திகள் அவிழ்த்து விடப்­ப­டு­கின்­றன. இந்த விட­யத்தில் இந்­தியா மௌன விர­தத்தை கடைப்­பி­டிக்­கின்­றதே தவிர பகி­ரங்­க­மான தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டை­யாக தெரி­விப்­ப­தா­கவும் இல்லை.

இன்னும் சீனப்­பூச்­சாண்­டியே இது விட­யத்தில் காட்­டப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது. எது எப்­படி பார்க்­கின்­ற­போதும்   கடந்த காலத்தில் காங்­கிரஸ் அர­சாங்கம் கடைப்­பி­டித்த  கொள்­கை­க­ளையே மோடி   அர­சாங்கம் கடைப்­பி­டித்து விடுமோ என்ற பயப்­பாடு வடக்­கி­ழக்கு மக்­க­ளிடம் ஊறிக் கொண்­டி­ருப்பதே உண்மை நிலையாக இருக்கிறது. இந்­தி­யாவில் எத்­த­னை­ய­ர­சாங்க ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டாலும் அதன் வெளி­யு­றவுக் கொள்­கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.

அந்த வகையில் இலங்கை விவ­கா­ரத்தில் குறிப்­பிட்டு சுட்டிக் காட்­டக்­கூ­டிய எந்த மாற்­றமும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. எனவே கூட்­ட­மைப்பின் முதல் கோரிக்கை எந்த பய­னையும் இந்­திய தரப்­பினால் தரப்­போ­வ­தில்­லை­யென்றும் அவ நம்­பிக்கை பேசு­வோரும் நம்­மத்­தியில் இருக்­கவே செய்­கின்­றார்கள்.

ஆனால் எந்த ஒரு அர­சா­ங்­கத்­தி­னது நடை­முறைப் போக்கை தீர்­மா­னிக்கும் கார­ணி­களில் முக்­கியம் பெறு­பவை யதார்த்த அர­சியல் நடை­மு­றை­களும் அதன் சூழ்­நி­லைத்­தாக்­கங்­களும் என்­ப­தே­யுண்மை. இந்­தி­யாவின் இன்­றைய நாளைக்கு அப்­ப­டியே இருந்து விடும் என்று இருப்பு நிலை­வா­தத்­தையும் யாரும் நிரூ­பிக்க முடி­யாது. சில வேளைகளில் சர்­வ­தேச கால­தேச வர்த்­தக மானங்கள் மாறு­கின்­ற­போது மாற­மு­டி­யா­த­வையும் மாறக்­கூடும். அவ்­வா­றா­ன­தொரு மாற்றம் வரு­மென்­பதும் ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மு­மல்ல.

கூட்­ட­மைப்பின் விஜ­யத்தின் இரண்­டா­வது அடைப்­பொ­ரு­ளாகப் பேசப்­பட்­ட­வையும் சொல்­லப்­பட்­ட­வையும் இலங்கை இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு சார்ந்த விட­ய­மாகும். இது புதிய இந்­திய அர­சுக்கு சொல்­லப்­பட வேண்­டிய ஒரு விட­ய­மாக கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்று வர­லாறு எழுத முற்­ப­டு­கின்­ற­போது இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு சார்ந்த விட­யத்தை விலத்­திக்­கொண்டு எழு­து­வது என்பது பொய்யான விடயமே.

இந்­திய அர­சாங்­கத்தின் முனைப்­பினால் உரு­வாக்­கப்­பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் இதன் தத்துக் குழந்­தை­யாக பிறப்­பெ­டுத்த 13ஆவது சட்­டத்­தி­ருத்தம் அர­சியல் தீர்வின் முதல் அத்­தி­யா­ய­மென்­ப­தற்கு மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது.

கிழிக்­கப்­பட்ட ஒப்­பந்­தங்கள் மறுக்­கப்­பட்ட பேச்சு வார்த்­தை­க­ளுக்கு பின்னால் புதிய பரி­ணா­ம­மாகப் பார்க்­கப்­பட்­டவை 13ஆவது திருத்தச் சட்­ட­மாகும். இந்த சட்டம் இன்னும் ஒரு­குறை மாதக்­கு­ழந்­தை­யா­கவே சப்பாணி நகர்வு நகர்கின்றது என்பதும் உண்மையே.

இவ்­வி­டயம் இந்­திய பிர­தமர் உட்­பட்ட அனை­வ­ரி­டமும் கூட்­ட­மைப்­பினர் விலா­வா­ரி­யாக விளக்­கி­யுள்­ளார்கள் என்­பதும் தெரிந்த விட­யம்தான். ஆனால் இந்­திய அர­சாங்கம் இந்த விட­யத்தை எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றது என்­பது புரியா புதி­ரா­கவே இருக்­கின்­றது.

இதற்கு மேலாக சார்க் பிராந்­தி­யத்தில் தன்­னை­யொரு நாய­க­னாக பாவனை பண்­ணிக்­கொண்­டி­ருக்கும் இந்­திய மேலாண்­மை­வாதம் இலங்­கைக்கு ஒரு அழுத்­தத்தைக் கொடுக்­கமுன் வருமா? அல்­லது தனது பிராந்­திய நல­னுக்கு அவப்­பெயர் ஏற்­படும் வகையில் நடந்து கொள்­ளுமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டே வருகின்றது.

எப்­ப­டி­யி­ருந்த போதிலும் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்பை அடுத்து இந்­தியப்   பிர­தமர் நரேந்­திர மோடி பின்­வரும் கருத்­தொன்றை வலி­யு­றுத்­தி­யி­ருப்­பது ஏதோ ஒரு மூலையில் நம்­பிக்கை தரு­வ­தா­கவே காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அதுதான் இலங்­கை­யி­லுள்ள சிறு­பான்மை தமிழ் மக்­களின் கௌரவம், சம­வு­ரிமை, சுய­கௌ­ரவம், நீதி, நல்­லி­ணக்கம் என்­ப­வற்றை இலங்கை அர­சாங்கம் உறுதி செய்ய வேண்­டு­மென பிர­தமர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பது இன்னும் பொறுத்­தி­ருங்கள் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

SHARE