இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பது என்ற தனது முக்கிய கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐந்து வயது சிறுவன் கல்கமுவவில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பது என்ற தனது முக்கிய கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது என்பதை இந்த சம்பவம் புலப்படுத்துகிறது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய கடப்பாடுடைய பொலிஸ் திணைக்களத்தை அரசாங்கமே பலவீனப்படுத்தியதும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு பொலிஸாரின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதும் இதற்கு ஒரு காரணம். பொலிஸார் அடிப்படைக் கட்டமைப்பிற்குள் பணிபுரிவதற்கான தமது திறமையை இழந்துவிட்டனர் – எனவும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.