இலங்கை அரசாங்கம் 4 வது ஆண்டாக ஜெனிவாவில் மூச்சு எடுப்பதற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது : கி.மா.உ. ஜனா!!

961

ஜெனிவாவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சென்று நியாயம் கேட்கப் போனால் எங்களை தேசத்துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் ஜெனிவாவிற்குப் போவதற்கு காரண கர்த்தா யார்? எங்களை இவ்வளவு துரம் போக வைத்தது யார்? எமது தமிழினத்தின் தேசியப் பிரச்சனையை இந்த அரசு சமஸ்ட்டி முறையில் தீர்து வைத்திருந்தால் நாங்கள் ஏன் ஜெனிவாவிற்குப் போகப் போகின்றோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன்-கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வரலாற்றுச் சிறப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த திங்கட் கிழமை (17) மாலை தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்.ஆலயங்கள் சில இடங்களில் வியாபார ஸ்தலங்களாக மறிக் கொண்டு வருகின்றன இதனைவிட கிராமங்களில் தேவைக்கு அதிகமாக நிருவகிக்க முடியாத அளவிற்கு ஆலயங்கள் பூர்தி செய்யப்படாமல் பார்ப்பதற்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி கிராமம் முதலிடத்தினை வகிக்கின்றது. 37 கோயில்கள் அங்கு இருக்கின்றன. குடிக்கு ஒரு கோயில் காணப்படுகின்றன. ஆனால் தேற்றாத்தீவு எனும் இப்பெரிய கிராமத்தில் மிகவும் அடக்கமாக 5 ஆலயங்களுடன் இந்து மதம் மிளிர்கின்றபோது பெருமையாக இருக்கின்றது.

ஓவ்வொரு மத்திற்கும் ஒவ்வொரு தொடக்கம் உண்டு புத்தரின் அடியை ஒற்றி வந்தது பௌத்த மதம் யேசுவின் அடியை ஒற்றி வந்தது கிறிஸ்தவ மதம். முகமது நபியை ஒற்றி வந்தது இஸ்லாமிய மதம், இந்து மதம் பழமையானது, முதுமையானது தொடக்கமும் முடிவும் அற்றது.

மதகுருமார் இறைவனுக்கு தொண்டு செய்வதுவும் அடியார்களை நல்வழிப் படுத்துவதுமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இலங்கையிலே காணப்படுகின்ற பௌத்த மதகுருமார்களில் சிலர் காவாலிகளாகவும், காடைத்தனம் புரிபவர்களாகவும், காக்கிச் சட்டைபோடாத பொலிஸ் காரர்களாகவும் இருக்கின்றார்கள்.
நாங்கள் என்ன பாவம் தொய்தோமோ தெரியவில்லை இந்த நாட்டில் இந்துக்களாகப் பிறந்து சொல்லொணத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கிலுள்ள இந்துக்கள் மாத்திரமின்றி தலை நகரிலுமுள்ள இந்துக்களும் மிகவும் மோசமாகப் பாதிக்கபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 80 வருடங்களு;ககு மேலாக அலரி மாழிகைக்குப் பின்னால் இருந்த இந்துக் கோயில் இன்று அகற்றப்பட்டுள்ளது. 116 சிங்களக் குடும்பங்கள் மட்டக்களப்பு கெவுளியாமடுவிலும். புழுக்குனாவையிலும் அத்துமீறி குடியேறி இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு ஒரு விகாரை வேண்டும். நிரந்தர இடம்வேண்டும் என அந்த காவி உடை தரித்த பௌத்த மதகுருமார் எமது பிரதேசத்தனுள் புகுந்து பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் அட்டகாசம் செய்தது மாத்திரமின்றி மட்டு நகரிலும் ஊர்வலம் நடாத்தி அரச அதிபரிடம் மகஜர் கொடுத்திருக்கின்றார்கள்.

டம்புள்ளையில் காலா காலமாக 60 ஆண்டு காலமாக 150 தமிழ் குடும்பங்கள் வழிபட்டு வந்த ஆலயத்தினை அதே காவி உடை தரித்தவர்கள் உடைத்து எறிந்துள்ளார்கள் எமத மாவட்டத்திலுள் கெவுளியாமடு கிராமத்திற்கு செட்டிபாளையம், தேற்றாதீவு, களுதாவளை போன்ற பிரதேசங்களிலிருந்து எமது மூத்தோர்கள் பழங்காலத்தில் சென்று காடழித்து பயிர் செய்து வந்த எமது நிவப்பரப்பில் அதற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் அத்தமீறி குடியேறுகின்றார்கள். இதுதான் இந்த நாட்டின் நிலமை.

ஆனால் ‘அரசன் அன்றறுப்பான் தொய்வம் நின்று கொல்லும்’ என்பதற்கிணங்க இந்த நாட்டில் எமது இனங்களுக்கு இழைக்கபட்ட அநீதிகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஓர் தீர்வு வரவேண்டிய நேரத்தில் இறைவன் திருக்கேதீஸ்வர்திலும், திருகோணமலை அடிவாரத்திலும், எமது மக்களைக் கொன்றழித்த எச்சங்களை வெளி உலகிற்குக் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 4 வது ஆண்டாக ஜெனிவாவில் மூச்சு எடுப்பதற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த சர்வதேசத்திற்கு இந்த மனித எச்சங்களை இறைவன் வெளிக் காட்டியுள்ளார்.
நாங்கள் வழிபடும் தெய்வங்கள் எவ்வளவு உறுதியானது. எவ்வளவு சக்திமிக்கது என்று இதிலிருந்து நாம் கண்ணூடாகக் கண்டுள்ளோம்.

இன்று ஜெனிவாவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சென்று நியாயம் கேட்கப்போனால் எங்களை தேசத்துரோகிகள், நாட்டைக்காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் ஜெனிவரிற்குப் போவதற்கு காரண கர்த்தா யார்? எங்களை இவ்வளவு துரம் போக வைத்தது யார்? எமது தமிழினத்தின் தேசியப் பிரச்சனையை இந்த அரசு சமஸ்ட்டி முறையில் தீர்து வைத்திருந்தால் நாங்கள் எற் ஜெனிவாவிற்குப் போகப் போகின்றோம்.

1990 பிறேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இந்த நாட்டில் அராஜகம் நடக்கின்றது என ஜெனிவாவிற்குச் சமர்ப்பிப்பதற்கு சில தஸ்தாவேதுக்களை எடுத்துச் சென்றபோது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டு அந்த ஆணவங்கள் பறிக்கப்பட்டன.

ஆனால் இன்று லெட்சக்கணக்கில் எமது உறவுகளை இழந்து கல்வி பேன்ற சகலதையும் இழந்து அநாதைகளாக நிற்கும் நாம். ஏமக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை நாங்கள் இன்னும் இண்டாம் தரப்பிரஜைகளாக நடாத்தப் படுகின்றோம், சில வேளைகளில் அடிமைகளாக நடாத்தப் படுகின்றோம். இவைகளனைத்திற்கும் எமக்கு நீதி வேண்டும் என்று கேட்டுத்தான் நாங்கள் ஜெனிவாவிற்குப் போகின்றோம். இந்த நாட்டில் எமக்கு நியாயமான தீர்வு தரவில்லை என்றால் அரசால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால் கூறப்பட்டுள்ள விடையங்களையாவது நடைமுறைப் படுத்தா விட்டால் அன்று தந்தை எல்வா எமக்குக் கூறியது போன்று இந்த நாட்டின் தலைவிதியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

அது மாத்திரமல்ல தமிழ் மக்கள் இன்னமும் வடகிழக்கில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து 5 வருடங்கள் கழிந்த பின்னரும் இன்னும் சம்பூரில் அகதி முகாம் இருந்து கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அகதிமுகாம், வலி வடக்கில் 23 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி 6400 ஏக்கர் நிலப்பரப்பினைப் பிடித்திருக்கின்றர்கள்.

எமது மட்டக்களப்பு மாடத்திலுள்ள பாலமுனை, முறக்கொட்டாஞ்சேனை போன்ற இடங்களில் தமிழ் மக்களின் காணிகள், வீடுகள் அரச படைகளின் முகாம்களுக்குள் இருக்கின்றன. தமிழ் மக்களது காணிகளை இராணுவத்தினர் அவர்களது சொந்தக்காணி போன்று பாவிப்பது மாத்திரமின்றி அந்த மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றார்கள்.

இங்கு நடப்பது என்ன எமது இனப் பரம்பலை திட்மிட்டு நசுக்க வேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கின்றது. தமிழ் மக்களின் எல்லைப் புறங்களில் பிற இனத்தவர்களை காசு, நிலம், பாதுகாப்பு, போன்ற கொடுத்து எமது சொந்த உறுதி நிலங்களைப் பாறிப்பது மாத்திரமல்லாமல் அரச நிலங்களை அர்களுக்கு ஒப்பம் கொடுத்து குடியமர்த்துகின்றார்கள்.

100 வீதம் தமிழ் மக்கள வாழ்ந்த பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தற்போது ஓரிரு சிங்கள கிராமங்கள் இருக்கும் தொகுதியாக மாறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில தமிழ் மக்கள் 40 வீதம் ஏனைய மக்கள் 60 வீதம் இருக்கின்றார்கள். இதே நிலமை இன்று வட மாகாணத்தில ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்தொழித்து அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். திட்டமிட்ட வகையில் வெலிஓயா என்ற பிரதேசத்தை உருவாக்கி வடக்கு கிழக்கைப் பிரித்து வைத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில்தான் எமது மக்களுக்காக வேண்டி நாம் ஆயுதம் ஏந்தினோம் தற்போது அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் எந்தவித தீர்வுகளும் இதுவரையில் எட்டப்படாத காரணத்தினால்தான் நாங்கள் ஜெனிவா சென்றுள்ளோம்.

நாங்கள் கூறுவது எல்லாம் இதய சுத்தியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சவார்த்தை நடாத்த வேண்டும் என்று.

இதுவரை காலமும் பேசிய பேச்சுக்கள் இதயச சுத்தி இல்லாத பேச்சுக்கள் தான் நடைபெற்றன. தந்தை செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சதிரிக்கா-விடுதலைப்புலிகள் பேச்சவார்தை, ரணில்-விடுதலைப்புலிகள் பேச்சவார்தை, மகிந்த ராஜ பக்ஸ -தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான பேச்சுக்கள் 2011 ஆம் அண்டு முறிவடைந்த பேச்சுக்கள் வரைக்கும் இதய சுத்தியுடன் எந்தப் பேச்சவார்தைகளும் இடம்பெறவில்லை. நாங்கள் கெட்பது எ;லாhம் தமிழ் மக்கள் தலை நிரித்ந்து வாழ் வேண்டும் அவர்களுக்கு சுயாட்சி வேண்டும். 1987 ஆம் அண்டு உருவாக்ப்ட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் வடக்கு கிழக்கில் அமுல்ப்படுத்த்படல வேண்டும், வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக உருவாக்கடப்பட்டு எமது இடம் இழந்த இழப்பிற்று காணி பொலிஸ அதிகாரங்களுடன் சுயாட்சி தேவை என்றுதான கேட்கின்றோம்.

இவைகளை இந்த அரசு தந்தால் இந்து சர்சதேசத்தின் பிடியிலிருந்து மாற்றம் வரும்.இவைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் என்றும் உறுதியுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரைக்கும் தமிழ்ன் தமிழனாகவே இருக்க வேண்டும்.

13 வது திருத்தச் சட்டத்தின் மூலமாக ஏனை மாகாணங்களில் முறையாக அமுல் படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் போதும் வடக்கு கிழக்கில் இன்னும் அது அமுலாக்கம் செய்யாமல் அநீதியை இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் அயுதப் போராட்டத்திற்கு முன்பிருந்து இராணுவ ஆட்சி இன்று வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.ஏனெனில் வடக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி ஆளுனராகவும் கிழக்கில் முன்னாள் கடற்படை அதிகாரி ஆளுனராக இருக்கின்றார்கள் ஏனைய 7 மனாகாணங்களில் ஆளுனர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ எனத் தெரியாதுள்ளது.

தெற்கிலே ஒரு அளுர் இருக்கின்றார் அலவி மௌலான அவர் என்ன செய்கின்றார் எனத் தெரியாது, அதுபோல் கிழக்கு மகாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருகின்றார் அவர் என்ன செய்கின்றர் என்று எங்களுக்குத் தெரியாது.

அங்கே ஒரு சும்மா ஆளுனர் இங்கே ஒரு சும்மா முதலமைச்சர். வடக்கிலே முதலமைச்சரையோ அமைச்சரவையையோ எதனையும் செய்ய அங்குள்ள ஆளுனர் விடுகின்றாரில்லை இதுதான் இந்த நாட்டின் நிலமை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

SHARE