உலக பூகோள அரசியல் பந்தில் முதல் வல்லரசாக அமெரிக்கா வும், உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவதாக சீனாவும், உலகத் தரைப் படையில் 04வதாக இந்தியாவும் திகழ்கிறது. ஒரு கட்டத்தில் அமெரிக் காவை தோற்கடித்து முதல் நிலைக்கு வந்தது சீனா. பின்னர் அதனை சீர் செய்துகொண்ட அமெரிக்கா வட கொரியாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்தை சீர்செய்து பூகோள அரசியலில் தன்னை ஒரு ஸ்திரமான நிலைக்கு மாற்றிக் கொண்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு ஆட்சி செய்யும் ஜனாதிபதிக்கு பொறாமை என்பது இல்லை. வெற்றி பெற்றவர் தனது ஆட்சி காலம் வரை நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படாத வண்ணம் செயற்படுவார். ஊ.ஐ.யு எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுக் கட்டமைப்பு அந் நாட்டையும் ஏனைய நாட்டையும் தமது கட்டுக்கோப்புக்குள் வைத் துள்ளது. அது போன்று ஆசியக் கண்டத்தில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கைத் தீவின் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளையும், ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களையும் ஆரம்பகட்டத்தில் ஆயுதங்களை வழங்கிப் போராட களமிறக்கியது இந்தியா. இது இவர்களது சுயலாப அரசியலை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாது, இந்தியாவைத் தவிர எந்தவொரு நாடும் இலங்கையில் கால் பதித்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் குறியாக இருக்கின்றார்கள்.
ஆயுதப் போராட்டக் குழுக்களை வளர்த்த இந்திய அரசாங்கம், வட-கிழக்கு தமிழர் தாயகத்தைப் பிடித்துக் கொடுப்ப தற்காகவே 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தை இலங்கையில் களமிறக்கியது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழினத்துக்கு தமிழர் தாயகம் வழங்கப்பட்டால் சிங்கள வருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென சிங்கள அரச தலைவர்களான து.சு ஜெயவர்தன, ரணசிங்க பிரேம தாசாவும் இணைந்து தமிழ் ஆயுதக் கட்சிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை தோற்றுவித்தனர். அக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமே ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக இருந்தது. இதனை து.சு ஜெயவர்த்தனவும், ரண சிங்க பிரேமதாசவும் ஒரு தந்திரமாக பயன்படுத்திக்கொண்டதுடன், 1987ம் ஆண்டு ஆயுதங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் தமது தற்பாதுகாப்பை தவிர எந்த வொரு ஆயுதமும் அவர்களிடம் இருக்கவில்லை. அக்காலத்தில் ரணசிங்க பிரேமதாசா தமிழீழ விடுதலைப்புலிகளை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்கு வாகனம் மற்றும் ஆயுதங்கள் வழங்கி இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு பாரியதொரு தந்திரோபாயத்தைக் கையாண்டார்.
விடுதலைப் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்குமிடையில் போர் ஏற்பட்டது. 1600க்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் இந்நாட்டில் கொல்லப்பட்டனர். பலர் காய மடைந்தனர். அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் மணலாற்று காட்டு பகுதியில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டு இந்திய இராணுவத்துடன் போராட் டத்தை தொடுத்திருந்தார். அதே நேரம் தியாகி திலீபன் 5 அம்ச கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருந்தார். காந்தியத்திற்கு இந்திய அரசு மதிப்பளிப்பதால் அதனை ஏற்றுக்கொண்ட இந்திய இராணுவம் நாட்டை விட்டு வெளியேறிச்சென்றது. இக்கால கட்டத்தில் இராணுவத்திற்கு சார்பாக இருந்த நு.P.சு.டு.கு, புளொட், ரெலோ மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்ட பின் ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பது போல் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தது. ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு தமிழருக்கு தமிழீழத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறியதன் விளைவாக தமிழீழ விடுதலைப்புலிகளால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். தமிழ் மக்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுத்தருவதாக கூறிய ரணசிங்க பிரேமதாசா அவர்களும் ஏமாற்றியதன் விளைவாக அவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அதிதீவிரமாக இலங்கை அரசு பன்னாட்டு உதவிகளுடனும், இந்திய அரசின் உதவியுடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போரைத் தொடுத்தது. இதன் போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ரெலோ, புளொட், நு.P.னு.Pஇ நு.P.சு.டு.கு போன்ற அமைப்புக்களும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமி ழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். இதன் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் துரோகி கள் என முத்திரை குத்தப்பட்டு தெருத் தெருவாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திய இலங்கை அரசு ரெலோ, நு.P.சு.டு.கு தவிர நு.P.னு.P, புளொட் போன்ற கட்சிகளை மாத்திரம் விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நிறைவுபெறும் வரை தன்னுடன் வைத்திருந்தது.
2001-2004 வரை ஒரு சுமுகமான பேச்சுவார்த்தை சந்திரிக்கா அரசால் மேற்கொண்டதற்கமைய தேர்தல் ஒன்றிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள மக்கள் ஜன நாயக ரீதியில் வாக்களிக்க சந்தர்ப்பம் அமைந்தது. அத்தேர்தலில் தமி ழீழ விடுதலைப்புலிகளால் உருவாக் கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களுடன் போனஸ் ஆசனங்கள் அடங்கலாக மொத்தம் 25 ஆசனங்களைக் கைப்பற்றினர். அது தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத பலத்துடன் இருந்த காலகட்டம்.
இவ்வாறான நிலையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த வேண்டும் என இந்திய அரசுடன் இணைந்து சர்வதேச நாடுகளும் திட்டம் தீட்டியது. 2004ம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் தமி ழீழ விடுதலைப்புலிகளின் கையில் வழங்கப்பட்டது. இதனையும் குழப்பும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வந்தது. இதனுடைய பின்னணியில் தான் அமெரிக்கா உள்நுழைகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இணைந்து முத்திரை குத்தியதுடன், இலங்கை அரசு இந்நாடுகளுடன் நட்புறவும் கொண்டது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடனான போர் மாவிலாறில் ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் இனவழிப்புடன் முடிந்தது.
இலங்கைக்குள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான நோர்வே களமிறக்கப்பட்டதன் விளைவு பிரபா – கருணா பிரிவிற்கு வித்திட்டது. இதில் அமெரிக்க அரசு தனது நலனுக்காக நோர்வே நாட்டை வைத்து சாதித்தும் காட்டியது. கடல், வான், தரை என்று முப்படைகளையும் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா நிறுவியது. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவ டைந்தது. 2003ம் ஆண்டு 9ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை 52 நாடுகள் உட்பட்ட 22 அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்தனர். திட்டமிட்டே அமெரிக்கா, நோர்வே அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சு வார்த்தையை குழப்பியடித்தது. அமெரிக்காவினுடைய நோக்கம் என்னவெனில் எதிர்காலத்தில் 03 ஆம் உலக மகாயுத்தம் என ஒன்று ஆரம்பிக்கப்படுமாகவிருந்தால் ஆசி யப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகத்தை தமக்குச் சாதகமா கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுவே. அத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், அமெரிக் காவின் போர் கப்பல்கள் இலங்கை துறைமுகத்திற்கு தங்குதடையின்றி வந்து செல்ல ஏதுவான வழிமுறைக ளையும் கூட ஏற்படுத்திக்கொண்டனர். இவ் ஒப்பந்தம் சாத்தியப்படுமானால் மட்டுமே விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் விடயம் சாத்திய மாகும். அதற்கு அமைவாகவே இலங்கை அரசு செயற்பட்டது. இலங்கை அரசின் இந்த நன்றிக் கடனாகவே கடல் பிராந்தியத்தின் வளங்கள் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
விடுதலைப் புலிகளுக்கு இந்தோனேசியா, எதியோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து வந்த 8 ஆயுத கப்பல்கள் அமெரிக்க உதவியுடன் காட்டி கொடுக்கப்பட்டது. அதன் பின் அவை மூழ்கடிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து 250 கடல் மைல் தொலைவில் அமெரிக்காவின் போர் கப்பலான ரொனால்ட் ரீகன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் தொடக்கம் அனைத்து வசதிகளும் உள்ளது.
இலங்கையின் உள் கட்டமைப்பு வசதிக்காக பாகிஸ்தானால் வழங்கப்பட்ட ஜெட் லைனரும் உள்ளடங்கும். விடுதலைப்புலிகளின் 8 ஆயுதக் கப்பல்களும் அழித் தொழிக்கப்பட்ட காட்சியை அமெரிக்கா ஒளிப்பதிவு செய்து கொண்டது. தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்வதை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சரணடையுமாறு பணித்தது. அதற்கு இணங்க பிரபாகரன் மறுத்தார். 250 கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்ட டொனால்ட் ரீகன் கப்பல் தங்களை வந்து காப்பாற்றும். அதற்கு உங்களின் பதில் என்ன? என்று விடுதலைப்புலிகளின் சர்வதேச விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள குமரன் பத்மநாதன் (மு.P) அவர்களுடன் தொடர்பு கொண்டு வினவியபோது ‘நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது’, ‘தமிழீழம் என்ற ஒன்று மலரும். அன்று எமது போராளிகளும் மலர்வார்கள்’. ‘எமது போராட்டம் துரோகிகளாலும், சர்வதேசத்தாலும் காட்டி கொடுக்கப்பட்டு விட்டது’ என்று அந்த உரையாடல் முடிவடைந்தது.
தினப்புயல் பத்திரிகையில் ஈழப்போரின் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி விரிவாக எழுதியுள்ளோம். இதில் அமெரிக்கா தனது பங்கை செவ்வனவே செய்து முடித்துள்ளது என்பதுதான் உண்மை. அமெரிக்காவின் தூதரகம் இலங்கையின் தலைநகரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் இலங்கையின் புலனாய்வு விடயங்கள் தொடர்பாகவும், ஏனைய நாடுகளின் ஊடுருவல் தொடர்பாகவும் பதிவுகள் செய்யப்படுகிறது. இலங்கை அரசாங்கம் ஒரு திட்டத்தை மேற்கொள்ள, அத்திட்டத்தை இங்கிருந்து தான் அமெரிக்க அரசு முறியடிக்கின்றது. பூகோள அரசியல் வட்டத்தில் அமெரிக்கா இலங்கையின் ஒரு நிரந்தர குடிமகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இவர்களுடைய இருப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சீனாவும், இந்தியாவும் ஏட்டிக்குப் போட்டியாக அரசியலில் காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் இலங்கை அரசுக்கு இந்தியாவினால் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படுகிறது.
தொடரும்…
இரணியன்