இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 24 மாநகரசபைகள், 42 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை 341 ஆகும்.
ஏற்கனவே 23 மாநகர சபைகள் , 41 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் என 336 உள்ளுராட்சி சபைகளுக்கும் விகிதாசார ரீதியாக 4,486 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
உள்ளுராட்சி சபைகள் தேர்தல் சட்டத்தில், தெரிவு வட்டாரம் 60 சத வீதம் விகிதாசாரம் 40 சத வீதம் என திருத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,356 அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஏற்கனவே 55 உறுப்பினர்களை கொண்டிருந்த கொழும்பு சபையில் வட்டார ரீதியாக – 66 விகிதாசார ரீதியாக – 44 என உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஆகக் கூடுதலான உறுப்பினர்களை கொண்ட சபையாக கொழும்பு மாநகர சபை விளங்கும்.
அது போன்று 9 உறுப்பினர்களை கொண்டிருந்த ஏறாவூர் நகர சபைக்கு வட்டார ரீதியாக 10 பேரும் விகிதாசார ரீதியாக 6 பேரும் என இனிமேல் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
ஆகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருந்த காரைத்தீவு பிரதேச சபைக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 இலிருந்து 11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டார ரீதியாக 07 பேரும் விகிதாசார ரீதியாக 4 பேரும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
அடுத்த மாதம் 11ம் திகதிக்கும் 20ம் திகதிக்குமிடையிலான குறித்த நாட்களில் வேட்பு மனுக்களை கோரவும் ஜனவரி 20ம் திகதிக்கும் 31ம் திகதிக்குமிடையிலான திகதியொன்றில் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை
உள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக வைத்தே சபையொன்றின் மொத்த அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும். அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் தொகையினை 60 சதவீதமாகக் கொண்டு அத்துடன் மேலதிகமாக 40 சதவீதத்தினை சேர்த்து அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக சபையொன்றின் வட்டாரங்களின் எண்ணிக்கை 12 என்றால் அது 60 சதவீதமாக கொள்ளப்பட்டு மிகுதி 40 சதவீத்தத்திற்கும் இன்னும் 08 அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த அங்கத்தவர்கள் தொகை 20 ஆக அமையும்.
வேட்பு மனு கட்சிகள் அல்லது குழுக்கள் இரண்டு வேட்புமனுப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலாவது வேட்பு மனு
முதலாவது வேட்புமனுப்பத்திரம் வட்டாரங்களுக்கு பெயர் குறிப்பிட்டு வேட்பாளர்களை நியமிக்கும் வேட்பு மனுவாகும்.
இந்த வேட்புமனுவில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்க வேண்டும். இவர்களுள் 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.
இரண்டாவது வேட்பு மனு
இரண்டாவது வேட்பு மனுப்பத்திரத்தில் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய 40 சதசவீதமான உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையுடைய நபர்களும் மேலதிகமா 03 நபர்களும் சேரக்கப்பட்டு பெயர்கள் வழங்கப்பட வேண்டும்.
இவர்களுள் 50 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.
இளைஞர் பிரதிநிதித்துவம் மொத்த வேட்பாளர்களின் தொகையில் 30 சதவீதமானவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும்.
கட்டுப் பணம்
கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர் ஒருவருக்கு ரூபா. 1500 வீதம் கட்டுப் பணம் செலுத்துதல் வேண்டும்.
சுயேச்சைக் குழுக்கள் வேட்பாளர் ஒருவருக்கு ரூபா. 5000 வீதம் கட்டுப் பணம் செலுத்துதல் வேண்டும்.
வாக்கெடுப்பு
வாக்காளர்கள் தமக்கு வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்புகின்ற கட்சியின் சின்னத்திற்கு அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்திற்கு நேரே புள்ளடியிடுதல் வேண்டும்.
வாக்கெண்ணல்
வாக்குகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படும். அவசர நிலமைகளில் தெரிவத்தாட்சி அலுவலரினால் வாக்ணெ;ணும் நிலையங்கள் மாற்றப்படலாம்.
தேர்தல் முடிவுகள்
வட்டார பிரதிநிதித்துவம்
வட்டாரங்களில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் ஆகக் கூடுதலான வாக்கினை பெறும் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
விகிததாசார முறைமை
உள்ளுராட்சிப் பிரதேசம் ஒன்றில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த சபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் பிரிக்கப்பட்டு பெறப்படும் தொகை தகைமை பெறும் எண்ணிக்கை எனப்படும்.
ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் தகைமை பெறும் எண்ணினால் பிரிக்கப்பட்டு கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் உரித்தாக வேண்டிய உறுப்பினர்களின் தொகை தீர்மானிக்கப்படும்.
ஏற்கனவே வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பான உறுப்பினர்களின் தொகை,கட்சிகளுக்கு உரித்தான தொகையிலிருந்து கழிக்கப்பட்டு மிகுதி உறுப்பினர்களை நியமிக்குமாறு கட்சிகள் கோரப்படும்.
அவ்வாறு நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் நியமிக்கப்படலாம்.
பெண் அங்கத்தவர் நியமனம்
ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் மொத்த அங்கத்தவர் தொகையில் 25 சதவீதமானவர்கள் பெண்களாக இருப்பதனை உறுதி செய்வதற்காக மேலே விபரிக்கப்பட்டவாறு விகிதாசார அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை பெண்களை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கீழே சொல்லப்படும் விதத்தில் பின்வருமாறு கணக்கீடு செய்து அறிவுறுத்தல் வழங்கும்.
அதாவது; ஒரு கட்சியில் விகிதாசார அடிப்படையில் குறித்த கட்சிக்கு உரித்தான உறுப்பினர் தொகையினை விட அதிகமான அங்கத்தவர்களை வட்டார அடிப்படையில் பெற்றிருந்தால் அக்குறித்த கட்சிகளில் பெண் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்கட்சிகள் மேலதிகமாக பெண்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும்; ஒரு கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையும் 03 பேருக்கு குறைவான உறுப்பினர்களையும் பெற்றிருந்தால் அக்கட்சியும் பெண்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏனைய கட்சிகளின் வாக்குகளின் விகிதாசார அடிப்பைடயில் பாராளுமன்ற தேர்தலின் பின்பு தேசியப்பட்டியல் தீர்மானிக்கபடுவது போன்று குறித்த சபைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீதமான பெண் அங்கத்தவர்கள் தெரிவு உறுதிப்படுத்தப்படும். இதன் போது கட்சியின் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் பெண் அங்கத்தவர்கள் நியமிக்கப்படலாம்.
ஆக மொத்தத்தில் ஒரு உள்ளுராட்சி பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு பிரதிநிதி இருப்பதுவும், மொத்த அங்கத்தவர்களில் 25 சதவீதமானோர் பெண்களாக இருப்பதுவும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் பிரிக்கப்பட்டு வழங்;கப்படுவதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட வேண்டியுள்ளது அத்துடன் உள்ளுராட்சி அமைச்சர் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை சட்டங்களை திருத்த வேண்டியுள்ளத
உள்ளுராட்சிமன்ற தேர்தலானது அடிப்படையான மக்களின் தேவைகளோடும் பிரச்சனைகளோடும் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாளுகின்ற மக்களுடைய தேவைகளை திருப்தி செய்கின்ற மக்களுடைய தேவைகளை கவனிக்கின்ற அடிப்படை நிறுவனங்களான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகும்.
இந்த தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்
இந்த தேர்தலானது அடிப்படையான மக்களின் தேவைகளோடும் பிரச்சனைகளோடும் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாளுகின்ற மக்களுடைய தேவைகளை திருப்தி செய்கின்ற மக்களுடைய தேவைகளை கவனிக்கின்ற அடிப்படை நிறுவனங்களான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகும்.
இந்த தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல.
உள்ளுராட்சி சபை என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். நல்ல தண்ணீர், நல்லவீதிகள் கொடுப்பதற்கான சபையாகும். எங்களுடைய நகரங்களையும் பிரதேசங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே உள்ளுராட்சி மன்றங்களின் கடமையாகும்.
கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் ஊழல்களும் மோசடிகளும் நிறைந்தவையாக இருந்துள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கு வந்த பணத்தினை மக்களுடைய தேவைகளை சரியாக நிவர்த்தி செய்ய பயன்படுத்தாமல் அவை மீண்டும் கொழும்பிற்கு திரும்பிச் செல்கின்ற வகையில் தான் உள்ளுராட்சி மன்றங்கள் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு சேவை செய்கின்றவையாக நேர்மையாக செயற்படுகின்றவையாக மக்களுடைய தேவைகளையும் கருத்துக்களையும் அறிந்து அந்த வகையில் சேவை செய்கின்றவையாக ஆற்றலோடு சேவை செய்கின்ற நிறுவனங்களாக அமைய வேண்டும் என்கின்ற நோக்கோடு தான் எங்களுடைய தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றது.
வெறுமனே வீர வசனங்கள் பேசுவதும் தேர்தலில் வெல்வதும் பின்னர் தங்களுடைய சுகபோகங்களை பார்க்கின்ற அரசியல் தான் தமிழ் மக்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கின்றது. அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர்கள், உண்மையாக கடந்த காலங்களில் தங்களை அர்ப்பணித்து மக்களுக்காக சேவையாற்றியவர்கள், தங்களுடைய கல்வியை இழந்து மக்களுக்காக போராடியவர்களை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் உண்மையான மக்கள் சேவகர்களை மக்கள் பெற முடியும்.
இந்த விடயங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர் சமூகம் மிகத் தெளிவான சிந்தனையோடு செயற்பட வேண்டும். ஏனெனில் இனிவரும் காலம் அவர்களுக்குரியது. எங்களுடைய பிரதேசங்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு தேவையான வேலைகளை செய்கின்ற கடமை அரசியல் தலைமைகளுக்குண்டு. அந்த இலக்கோடு தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி செயற்படவிருக்கின்றது.
இந்த தேர்தலில் மக்கள் தங்களுடைய மிக முக்கியமான பிரதிநிதித்துவமாக அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையோடும் நாங்கள் இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓரு தீர்வு திட்டத்திற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருவதாக தெரிவிக்கும் நிலையிலும் தீர்வு கிடைக்குமா என்பது அவர்களுக்கே தெரியாத நிலையிருக்கின்றது.
பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது அவசியமாகும்.பேச்சுவார்த்தைகளின்போது விட்டுக்கொடுப்பு என்பதும் மறுக்கமுடியாதது.
ஆனால் தமிழ் மக்களின் அடிப்படையான விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்யாமல்பேச்சுவார்த்தைகளை நடாத்துவது தமிழ் தலைவர்களின் கடமையாகும்.ஆனால் அவர்கள் அதனை செய்வார்களா என்பதை காலமே பதில்சொல்லும்.
இலங்கையில் கடந்த காலத்தில் மாறிமாறி ஆட்சியமைத்த இரண்டு பெரும் கட்சிகள் இணைந்துஆட்சியமைத்துள்ளது.இவை நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு பல வாக்குறுதிகளையளித்தன.இரண்டு தேசிய கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளதானது ஒரு அற்புதமான காலமாகும். இதனை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான வழிவகைளை பெறுவதற்கான வழிவகைகளை தமிழ் தலைமைகள் செய்யாத நிலையே இருக்கின்றது.
தமிழர்கள் தங்களுக்கு தேவையென்றால் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்வதும் எங்களுக்கு பிரச்சினையேற்பட்டால் தமிழர்கள்வேறு முஸ்லிம்கள் வேறு என்று சொல்வது சரியானது அல்ல.
தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளனர்.ஆனால் அது ஒருவருக்கொருவர் சந்தேகம்கொண்டு பார்க்கின்ற,ஒருவருவருக்கொருவர் பிரிந்திருக்கின்ற நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.இதுமிகவும் கவலைக்குரிய விடயம்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களையும் பயன்படுத்துகின்ற பேரினவாத போக்கு இருந்துவந்திருப்பதுடன் அதற்கு துணையாக தமிழர்களோ முஸ்லிம்களோ இருக்ககூடாது.
கிழக்கில் தமிழருக்கு பதிலா முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வராது பிரச்சினையல்ல.பல்லினங்கள் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தின் சகல மக்களினதும் நலன்களையும் சமத்துவமாக கருத்தில்கொள்ளும் முதலமைச்சர் வருவதுதான் அவசியமானதாகும்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துசெல்லவே விரும்பினோம்.அதற்கான சமிக்ஞையினை நாங்கள் வெளிப்படுத்தியபோதிலும் எங்களுக்கு எந்தவிதமான பதில்களும் வழங்கப்படாத நிலையிலேயே தனித்து தேர்தலில் குதிக்கவேண்டிய நிலையேற்பட்டது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே இடப்பங்கீடு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.அதற்குள் நாங்களும் சென்று பிரச்சினைகளை எதிர்கொள்வது அவளவு பொருத்தமானதாக இருக்காது.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் என்பது உள்ளுர் மக்களின் அபிவிருத்தி தொடர்பான விவகாரம்,உள்ளூர் மக்களின் உடனடி தேவை தொடர்பான விவகாரம்,சுத்தம்,சுகாதாரம் தொடர்பான விவகாரம்.இன்று நுளம்பு பெருக்கம்,உணவகங்களில் சுகாதாரம் இல்லை.இந்த விடயங்களை கருத்தில்கொண்டே உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் இருக்கின்றன.இதனை யார் செய்வார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிக்கவேண்டும்.
ஒற்றுமையென்னும் பெயரில் மீண்டும்மீண்டும் தமிழர்கள் தவறுசெய்வார்களாக இருந்தால் தமிழர்களை யாரும் காப்பாற்றமுடியாது.தமிழ் மக்கள் புத்திபூர்வமாக சிந்திக்கவேண்டும்.பகுத்தறிவுமூலமாக சிந்திக்கவேண்டும்.கடந்த காலத்தினை எடுத்துபார்த்து சிந்திக்கவேண்டும்.பல நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்காக களத்தில் நின்று சேவையாற்றியவர்கள் தொடர்ந்து புர்pந்துகொண்டு மக்கள் செயற்படவேண்டும்.
முஸ்லிம் தலைவர்களில் பலர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கியதான வடகிழக்கு இணைப்புக்கு தாங்களும் தயார் என்று பல தடவைகள் கூறியுள்ளனர்.அதற்கு தமிழ் தலைமைகள் ஏன் இன்னும் முயலவில்லையென்பதே எனக்கு இன்னும் விளங்காத நிலையிருக்கின்றது.வாக்குப்பெறுவதற்கு அந்ததந்த சமூகத்திற்கு கூறும் கருத்துகளின் உண்மை நிலைமை மக்களுக்கு தெரியும்.
மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என கடந்த காலத்தில் பல ஆணகை;குழுக்கள் அரசாங்கங்களினால் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.13வது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும், மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என சிங்கள தலைமைகள் உட்பட அனைவரும் உணர்ந்துள்ளனர்.
தேர்தலில் பணம் இல்லாத கட்சிகள் போட்டியிடமுடியாத நிலையே இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஒரு பிரதேசசபையில் போட்டியிட வேண்டுமாகவிருந்தால் கட்டுப்பணம் செலுத்துவதற்கு சுமார் 50ஆயிரம் ரூபா தேவையாகவுள்ளது.வடகிழக்கில் சுமார் 70 பிரதேசசபைகள் தமிழர்களின் பிரதேசசபைகளாக இருக்கின்றது.சுமார் 50இலட்சம் ரூபா பணம் தேவையாகவுள்ளது.போட்டிபோடுவதற்கு நாங்கள் நியமனம் பத்திரமே தாக்கல்செய்யமுடியாது.
இன்று பலகோடி ரூபாய்கள் தொடர்புபட்டதாக இந்த தேர்தல் அமைந்திருப்பது ஒரு துரதிஸ்டவசமான நிலையாகும்.இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.நாங்கள் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தினைப்பெறுவதற்காகவும் மக்கள் மத்தியில் எங்களது கருத்தினை எடுத்துச்செல்வதற்காக ஒரு சில பிரதேசசபைகளிலும் நகரசபைகளிலும் போட்டியிடுகின்றோம்.
மக்கள் இம்முறை தேர்தலில் யார் நுளம்பினையொழிப்பார்கள்,யார் குப்பைகளை அகற்றுவார்கள்,யார் தமது பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று பார்த்து வாக்களிக்கவேண்டும்.யார் எமது வளங்களை பாதுகாப்பார்கள் என்று வாக்களிக்கவேண்டும்.
இன்று உள்ளுராட்சிமன்றங்களுக்கு வருவோர் எவ்வாறு மண்ணை கொள்ளையிடலாம்,எவ்வாறு கல்லை கொள்ளையிடலாம்,காட்டை எவ்வாறு வெட்டி விற்கலாம் என்ற போக்கில் சிலர் வருகின்றனர்.இந்த நோக்கம் இல்லாமல் எமது பிரதேசத்தினை அபிவிருத்திசெய்கின்ற,எங்களது வளங்களை எங்களது மக்களுக்காக பயன்படுத்துகின்ற,எங்களது வளங்களை எமது அடுத்த தலைமைமுறைக்கு பாதுகாத்து வழங்ககூடியவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும்ஃ
எமத மாநகரங்களை சுத்தம் செய்வதானது அரசியல் தீர்வு மூலம்பெறமுடியாது.எமது உள்ளுராட்சிமன்றங்கள் சரியாக நடைபெறவேண்டும்.கடந்த காலத்தில் உள்ளுராட்சிமன்றங்களை கைப்பற்றிய அரசியல்வாதிகள் பெரிய கதைகள் எல்லாம் கதைத்துவிட்டு ஊழலிலும் மோசடி,தங்களுக்குள்ளேயே குத்துவெட்டுகள்,மத்திய அரசாங்கம் வழங்கிய நிதியை முறையாக பயன்படுத்தாமை போன்ற நிலைமையினை ஏற்படுத்தினர்.இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை மக்கள் உறுதிப்படுத்தவேண்’டும் .
tpn news