இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் ரம்போசா தனது விஜயம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் யூமாவிடம் தெளிவுபடுத்தவுள்ளார்.
இது இவ்வாறிருக்க இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ஜேக்கப் யூமாவின் செய்தியொன்றை சிறில் ரம்போசா கையளித்துள்ளார்.
எனினும் இந்த செய்தி குறித்த மேலதிக விபரங்களை இரு தரப்பும் இதுவரை வெளியிடவில்லை. கடந்த வருடம் ஜனாதிபதி ஜேக்கப் யூமாவே சிறில் ரம்போசாவை இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுகளுக்கு உதவுதற்கான விசேட பிரதிநிதியாக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.