இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய மோசமான பந்துவீச்சு! (வீடியோ இணைப்பு)

401
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய பந்து ரசிகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நெல்சனில் நடைபெற்றது.

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்கள் எடுத்திருந்த போது விடாத மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

டெய்லர் (20), நிசோல்ஸ் (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் 7வது ஓவரை மிலிந்தா சிறிவர்த்தனே வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தை அவர் மூன்று பிட்சில் நிசோல்ஸ்க்கு வீசினார். இந்தப் பந்துவீச்சு அதிகம் விமர்சிக்கப்பட்டது.

வீடியோ இதோ,

SHARE