இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரர்

431

2938377408161971502

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர முதுகில் கீழ் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் துஷ்மன்த சமீர நான்கு மாதங்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை தொடரவுள்ள நிலையில் நாடு திரும்பவுள்ளார்.

இங்கிலாந்துக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் இருபது ஓவர் போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது.

இரண்டாவது போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிக்கப்படுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
SHARE