இளம்பெண்ணை விடாமல் துரத்திய அணில் குட்டி…. குட்டி அணிலை கைது செய்த பொலிசார்!…

454

விசித்திரங்களால் உருவானதே வாழ்க்கை. ஆனால், சில விசித்திரங்கள் நம்மை உச்சகட்ட வியப்பில் ஆழ்த்துபவை. அப்படி ஒரு உச்சகட்ட விசித்திரம் ஜெர்மனில் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஜெர்மன் பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பதட்டத்துடன் பேசிய இளம்பெண், “ஒரு குட்டி அணில் என்னை விடாமல் துரத்துகிறது. யாராவது உடனே உதவிக்கு வாருங்கள்.” என்றார்.

இத்தனை வருட பொலிஸ் அனுபவத்தில் இப்படி ஒரு அழைப்பு வராததால் குழம்பிய ஜெர்மன் பொலிசார் உடனடியாக அந்தப் பெண் சொன்ன இடத்திற்குச் சென்று அந்த அணிலைக் கைது செய்து, சிறைக்காவலில் வைத்தனர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த விசித்திர சம்பவத்தை விவரமாக விளக்கினர்.

சரி, அணிலைக் கைது செய்தாயிற்று அடுத்தது என்ன, என்று மருத்துவர்களை வைத்து அந்த அணிலை சோதித்துப் பார்த்தனர். அப்போதுதான். அந்த அணில் பயங்கர சோர்வுடன் இருப்பது தெரிய வந்தது.

இதனால் வருத்தமடைந்த பெண் காவலர் ஒருவர், அந்த அணிலின் சோர்வைப் போக்க தேனை ஊட்டிவிட, இந்த வித்தியாசமான காட்சியை இன்னொரு காவலர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட, வேறென்ன வைரல்தான்.

 

SHARE