புத்தளத்தில் இளம் காதலர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நவத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த காதலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞன் மற்றும் 17 வயதான யுவதியுமே நீரில் மூழ்கியுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரியாமல் ஓடி வந்தவர்கள் எனவும், அவர்கள் உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
உயிரிழந்த 17 வயதான யுவதி காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் மாரவில, கொஸ்வத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் உயிரிழந்த இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மாலை வேளையில் குளிக்க சென்ற போது, இளம் பெண் முதலாவதாக ஏரியில் விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற சென்ற இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.