இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
வாத்துகாம பகுதியை சேர்ந்த ஆசிரியையாக பணியாற்றும் இளம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற 26 வயதான இளைஞனை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் தன்னை ஊடகவியலாளராகவும் மற்றும் திரைப்பட நடிகராகவும் அறிமுகம் செய்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற இளைஞன், திருமணம் செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனார். எனினும் பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்ய முயற்சி
எனினும் குறித்த இளைஞன் விசா முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்து, பெண்ணின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
வத்துக்காம பிரதேசத்திற்கு செல்வதற்காக கண்டி மணிக்கூட்டு கோபுர பேருந்து நிலையத்தில் தயாராக நின்ற போது, குறித்த இந்திய பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு கடத்த நடவடிக்கை
குறித்த இந்திய பிரஜையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கண்டி சுற்றுலா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்திய பிரஜையை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.