இளையராஜா போட்ட பிச்சை.. கண்கலங்கி அழுத பாடகர் மனோ

73

 

இந்திய திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் முக்கியமானவர் மனோ. இதுவரை 35,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி 3000-க்கும் மேல் இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். சூப்பர் சிங்கர் ஆரம்பகால கட்டத்தில் நடுவராக இருந்த இவர், பின் சில சீசன்களாக இதில் இல்லை. ஆனால், தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 10ல் நடுவராக மீண்டும் வந்து கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

மக்களின் மனதில் சிறந்த பின்னணி பாடகர் என இடம்பிடித்த மனோ அவர்களின் 40 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடி, கௌரவிக்கும் வகையில் இந்த வாரம் சூப்பர் சிங்கர் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

இளையராஜா போட்ட பிச்சை
இதில் இளையராஜா குறித்து மனோ அவர்கள் பேசும்போது ‘எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா அவர்கள்’ என கூறி கண்கலங்கி அழுதார். அந்த Promo வீடியோ தற்போது வெளிவந்து அனைவரும் கலங்க வைத்துள்ளது.

SHARE