சுறா மற்றும் பல கடல்வாழ் இனங்களில் காணப்படும் ஒரு குறித்த உள்ளாதியான ஜெல்லி, அவற்றின் இரைகளிலிருந்து வரும் மின் சமிக்ஞைகளை அறிய உதவுகிறது.
தற்போதைய ஆய்வுகளின் படி இதுவே இயற்கை உலகின் மிகச்சிறந்த உயிரியல் புரோத்தன் கடத்தியாகும்.
இது தொடர்பில் வாசிங்டன் பல்கலைக்கழக, பொறியியளாளர் Marco Rolandi கூறுகையில், ஜெல்லியின் இந்த புரோத்தன் கடத்துதிறன் மிக ஆச்சர்யமானது, இக் கண்டுபிடிப்பானது பிற்காலத்தில் மின் உணர் தொழிற்பாடு தொடர்பான ஜெல்லியின் மேலதிக ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என கூறுகிறார்.
இவ் ஜெல்லியானது கடல்வாழ் உயிரினங்களில் தலை, கசியிழைய மீன்களின் கீழ்ப்பகுதி மற்றும் தோல் பகுதியிலுள்ள சிறு துளைகளிலும் காணப்படுகிறது.
தெளிந்த, பாகுமையுடைய ஜெல்லியினால் நிரப்பப்பட்ட இத் துளைகள் மின் உணர் கலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது மற்றைய விலங்குகளால் பிறப்பிக்கப்படும் மின்னை உணரக்கூடியது. இவ் ஆராய்ச்சிக்கென சுறாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜெல்லி ஆய்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
ஆய்வுகளின் முடிவிலிருந்து, உயிர் பொருட்களில் அதிக புரோத்தன் கடத்து திறன் கொண்டது இதுவே என இனங்காணப்பட்டுள்ளது.
அதன் கடத்துதிறன் சிறந்த கடத்துதிறன் கொண்ட, தொகுக்கப்பட்ட பல்பகுதியம், Nafion இன் கடத்துதிறனிலும் 40 மடங்கு குறைவானது.