ஈகோ பிரச்சனை.. இயக்குனர் தலையில் தட்டிய ஜெயம் ரவி, என்ன நடந்தது

83

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜெயம் ரவி தனது சினிமா வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ஈகோ பிரச்சனை
இதில், ‘உங்களுக்கு ஒரு கதை சொல்லி, அதை நீங்கள் வேண்டாம் என சொன்ன பிறகு ஹிட்டாகி இருக்கா, அதற்கு நீங்கள் வருத்தப்பட்டு இருக்கீங்களா’ என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி “அப்படி நடந்தது இல்லை. ஒரு இயக்குனர் வேறொரு ஹீரோவுடன் சண்டைபோட்டு, அதே கதையை எனக்கு சொன்னார். நான் உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டேன்”.

“இருவருக்குமே இடையே ஈகோ தான் பிரச்சனை என தெரிந்தபின், நான் அந்த படத்தை பண்ணா மாட்டேன் என கூறினேன். வேறு எதாவது பிரச்சனை என்றால் பரவாயில்லை. ஆனால், இது தவறு என கூறி இயக்குனர் தலையில் தட்டி, அந்த ஹீரோவுடன் தான் நீங்க படம் பண்ணனும் என சொன்னேன்’ என பேசினார் ஜெயம் ரவி.

SHARE