ஈரானின் தாக்குதல் ; பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

108

 

ஈரான் மோதல் போக்கானது அடுத்த நகர்வை இட்டுச்செல்லுமாக இருந்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நடவடிக்கை நீடித்தால் உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் பிரித்தானியாவும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய தீவிரவாத நடவடிக்கை
இரு நாடுகளுக்குமிடையேயான மோதல் போராக மாறினால், பிரித்தானியாவில் ஈரானிய தீவிரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தாஜனியா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாலையே ஈரான் பழி தீர்க்க முயலும் என்றும், பிரித்தானியாவில் இருந்தே ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஈரானுக்கு பதிலடி தருவதாக இஸ்ரேல் முயன்றால், அது இன்னொரு போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேலின் முடிவை தற்போது உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் பதற்றம் அதிகரித்தால் போர் ஏற்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு காசா மீதான போர் தீவிரமடையக்கூடும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது

SHARE