ஈரானிய ஷீஆ புரட்சியும் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் பரிணாம வளர்ச்சியும்.

413

 

ஈரானில் 1979ம் ஆண்டு ஷீஆ முல்லாக்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியானது சர்வதேச பயங்கரவாதம் வளர்வதற்கான ஒரு பாரிய ஊக்கத்தினை வழங்கியது. திறந்த அரசியல் சூழல் என தமது புரட்சியை முல்லாக்கள் வர்ணித்து குறுகிய காலப்பகுதியில் ஈரானிய ஷீஆ அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புரட்சிகர படையினர் மற்றும் ஷீஆ துணை இராணுவ படையினர் இணைந்து ஷீஆ அரசுடன் கருத்து முரண்பாடுள்ளவர்களை மாத்திரமன்றி, ஷீஆ அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துணிந்த எல்லோரையும் கைது செய்து, அவர்களை சித்திரவதை செய்து மரண தண்டனையை நிறைவேற்றியதுடன் அவ்வாறான எதிர்ப்பு கருத்துக்கள் கொண்ட சமூகத்தின் மீதே தமது அடக்குமுறைகளையும் முன்னெடுத்தனர். இதன் ஒரு அங்கமாகவே ஈரானில் 1988 காலப்பகுதியில் ஷீஆ அரசினை எதிர்த்தமைக்காக 30,000க்கும் அதிகமான அரசியல் கைதிகள் (முஸ்லிம்கள்) கொமையினால் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரானிய ஷீஆ அரசினை நிறுவிய ரூஹுல்லா கொமைனி ஈரானிய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு தனது ஆதிக்கத்தின் கீழ் அனைத்து சக்திகளும் இருக்கவேண்டும் (அகன்ற பாரசீகம்) என்பதில் உறுதியாக இருந்தான்.

தனது ஆதிக்கத்தினை (அகன்ற பாரசீக கனவினை) நிலைநாட்டுவதற்காக வெளிநாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கில் ஆகுமான தற்கொலை தாக்குதல் எனும் கோட்பாட்டினை உருவாக்கினான். அத்துடன் இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி கொமைனி தனது பயங்கரவாத கொள்கையினை பரப்புதவற்காக ஈரானிய புரட்சிப் படையினூடாக பல்வேறு துணைப்படைகள் (பயங்கரவாத குழுக்கள்) உருவாக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஈரானிலுள்ள கொமையனியின் ஐஸிஸ் ஆனது தற்போது ஸிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஐ.எஸ் வருவதற்கு மூன்று தசாப்த காலத்திற்கு முன்பிருந்தே மத்திய கிழக்கு, மற்றும் ஏனைய நாடுகளில் தற்போது செயற்பட்டு வரும் பல பயங்கரவாத குழுக்கள் வளர்வதற்கான அடித்தளத்தினை  ஏற்படுத்தியது.

“இஸ்லாமிய புரட்சி” எனும் பெயரிலான கொமையினியின் இந்த சித்தாந்தமானது, இறை மார்க்கத்தில் கொமைனி மற்றும் முல்லாக்கள் தமது தவறான சொந்த விளக்கங்களை கொடுத்து இஸ்லாத்தினுள் யூத சிந்தனையை பரப்பும் செயற்பாடாகும். கொமைனி மிகப்பெரும் ஷீஆ சாம்ராஜ்யம் (அகன்ற பாரசீகம்) உருவாக வேண்டும் என கனவு கண்டதுடன், இதற்காக ஈராக்கில் தொடங்கி, லெபனான், ஸிரியா, பஹ்ரைன், யெமன் மற்றும் இது போன்ற நாடுகளில் தனது இலக்கினை செயற்படுத்த ஆரம்பித்தான்.

இதன் ஆரம்பமாக அவன் ஈராக்கை ஆக்கிரமிக்க 1980ம் ஆண்டுகளில் தொடுத்த ஈரான்-ஈராக் யுத்தமாகும். இதன் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், பல நூறு பில்லியன் இழப்புக்களையும் ஏற்படுத்தியது. 2003ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற   ஈராக் யுத்தத்தில் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டதுடன் சொல்லொனா இழப்புக்களையும் சந்தித்தனர். இக்காலப்பகுதியில் ஈரானினால் ஈராக் இரகசியமாக ஆக்கிரமிக்கப்பட்ட மிக அதிகமான முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டனர். தற்போது ஸிரியாவில் ஈரானிய தலையீட்டினால்   அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது சொந்த இடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர். 

38 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஈரானிய ஷீஆ புரட்சிக் கொள்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும் உருவாகியுள்ளது. இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு செய்கின்ற கொடுமைகளுக்கும் ஷீஆ புரட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொடுமைளுக்கும் இடையே எந்த வித்தியாசங்களையும் காணமுடியவில்லை. ​

தற்போது வளைகுடா அரபு நாடுகள் உட்பட உலகிற்கு அச்சுறுத்தலாக செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது அஹ்லுஸ் ஸுன்னா சிந்தனையுடைய அமைப்பாக அடையாளப்படுத்த ஈரானிய ஷீஆ அரசு மற்றம் ஷீஆ சார்புடையவர்கள் முனைகின்ற போதிலும் ஈராக் மற்றும் ஸிரியாவில் அப்பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் வளைகுடா அரபு நாடுகளில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான காட்டுமிராண்டி செயற்பாடுகள் என்பனவற்றினை பார்க்கின்றபோது அகன்ற பாரசீக கனவினை அடைந்து கொள்வதற்காக கொமைனிச பயங்கரவாத சிந்தனையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து அவர்களாலேயே இயக்கப்படும் ஒரு இரகசிய கருவியாகவே செயற்படுகின்றது என்பது மாத்திரம் மிகத் தெளிவாகும்.

Picture

ஈரானில் அரச ஆதரவுடனான அடக்கு முறை அதிகரிப்பு – சுன்னி முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்க்கை

ஈரான் ஒரு பெரும்பான்மை முஸ்லிம் நாடு. இஸ்லாமிய கொள்கைகளுக்கேற்ப அதன் அரசியலமைப்பு மற்றும் அனைத்து சட்டங்களிலும் இஸ்லாம் பொதிந்துள்ளது. உண்மையில்இ இந்நாட்டின் உத்தியோக பூர்வ பெயர் ஈரான் இஸ்லாமிய குடியரசு என்பதாகும்.

உலகிலே ஏனைய பகுதிகளில் நடைபெறுவது போன்று முஸ்லிம் எதிர்ப்பு அடக்கு முறைகள் இல்லாத ஒரு தேசமாக இருப்பதால் ஈரான் முஸ்லிம்களுக்கு ஒரு சுவர்க்க பூமியாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.

அன்மைய மாதங்களில் அங்கு சுன்னி முஸ்லிம்களை கைது செய்கின்ற ஓர் அலை உருவாகி வருகிறது. டஷன் கணக்கானோர் தற்போது மரண விழிம்பிலும்இ மரண அபாயத்திலும் இருக்கின்றனர். அவர்களுக்கு ஈரான் தனது குரூரமான முறையான பாரம் தூக்கியில் (கிரேன்) தொங்கவிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுகிறது.

ஏன் இவ்வாறு நடக்கிறது?

ஈரான் ஒரு ஷீஆ நாடு. இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையுடைய இந்த ஷீஆக்களை முஸ்லிம்கள் பின்பற்றுவதில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி இனப் பாகுபாட்டினை ஏற்படுத்தி துன்புறுத்தப்படுகின்றனர். சில வேளை அதனை விட மோசமாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்.

அதே நேரம் ஈரான் உத்தியோகபூர்வமாக சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக சொல்கிறது. அவா்களது மதநம்பிக்கையினை பின்பற்றும் சுதந்திரம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது. ஆனால் அதன் உண்மைத் தன்மை மிகவும் வேறுபடுகிறது. ஷீஆ மதப் பிரிவினை பின்பற்றாதவர்கள் உண்மை முஸ்லிமாக கருதப்படுவதில்லை. அவர்கள் இறைவனதும்இ நாட்டினதும் மறைமுக எதிரிகளாகப் பார்க்கப்படுகின்றனர். இது குறிப்பாக முஸ்லிம்கள் விடயத்தில் காணப்படும் செயற்பாடாகும். ஷீஆ ஆதிக்க தெஹ்றான் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை அவர்களின் மத போட்டியாளர்களாகவும்இ அவர்களை பெரும் அச்சுறுத்தலாகவும் குறிப்பிடுகின்றனர்.

தினசரி வாழ்வில் அஹ்லுஸ் சுன்னாக்கள் ஒரு எல்லை வரை பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் எப்போதாவது நிலைமை மாறுகின்ற போது அல்லது செல்வாக்கினை அடைகின்ற போது தேசம் வெடித்து பிளவுபடும். குறிப்பாக ஈரானின் சிறுபான்மை இனக்குழுக்களான குர்திஸ்இ அறபு மற்றும் பலூச் பிராந்தியங்களில் இது ஏற்படும்.

கடந்த நவம்பர் மாதம்இ ஈரானின் பலூச் சிறுபான்மையின இரண்டு சுன்னி முஸ்லிம் கைதிகள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டனர். மனித உரிமைகள் செயற்பாட்டுக்கான செய்தி முகவரகத்தின் (ர்சுயுNயு) கருத்துப்படிஇ 22 வயதான வாஹித் சாஹ் பக்ஸ் மற்றும் 23 வயதான மஹ்மூத் சாஹ் பக்ஸ் ஆகியோர் ”மொஹரபி (கடவுளுக்கு எதிரான பகைமை)இ மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயற்பட்டார்கள்’ ஆகிய குற்றச் சாட்டுக்களுக்காக தூக்கிலிடப்பட்டனர்.

அந்த இருவரும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சஹீதானில் உள்ள புலனாய்வு தடுப்பு நிலைய அமைச்சில் வைத்து மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள்இ மற்றும் விசாரணைகளின் நம்பகத் தன்மை குறி்த்து வலுவான சந்தேகங்கள் நிலவுகின்றன. அதே குறித்த மாதத்தில் ஈரானின் உச்ச நீதிமன்றமானது மரிவான் அப்துல் கரீம் றீசா எனப்படும் ஈராக்கிய சுன்னி முஸ்லிம் ஒருவருக்கு பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி 33 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதே போன்று கடந்த நவம்பரில்இ சுன்னி முஸ்லிம்களாக மாறிய ஈரானின் அஹ்வாசி அறப் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 16 பேர் அஹ்வாஸ் நகரத்தில் நடைபெற்ற குர்ஆன் வகுப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டுக்கான செய்தி முகவரகம் (ர்சுயுNயு) தெரிவித்துள்ளது.

இதற்கிடையேஇ ஈரானிலுள்ள சுன்னி கைதிகளுக்கான சர்வதேச பிரச்சார அமைப்பு (ஐஊளுPஐ) தனது அறிக்கையில்: ”ஷீஆ சாா்பு ஈரானிய அரசாங்கமானது பரம்பரையாக ஷீஆக்களை பெரும்பான்மையாகக் கொண்ட குஸெஸ்தான் மாகாணத்தில் அஹ்வாஸி இனக் குழுவினரிடையே அஹ்லுஸ் சுன்னாக்களின் எழுச்சி ஏற்பட்டுவருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது’ எனது குறிப்பிட்டுள்ளது.

”2014ம் ஆண்டில் அஹ்லுஸ் சுன்னாக்களாக மாறிய குறைந்தது 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் சுன்னி மத நம்பிக்கைகளை பிரச்சாரம் செய்ததற்காகவும்இ ஏனைய 7 பேர் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றியதற்காகவும் கைது செய்யப்பட்டனர்’.

சுன்னிக்களாக மாறிய 20க்கும் மேற்பட்டோர் கடந்த பெப்ரவரி மாதம் அஹ்வாஸ் நகரத்திலுள்ள கோயே அலாவி எனுமிடத்தில் நடைபெற்ற குர்ஆன் மற்றும் அறபு மொழி கற்கை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். ஈரானிலுள்ள சுன்னி கைதிகளுக்கான சர்வதேச பிரச்சார அமைப்பு (ஐஊளுPஐ) மேலும் தெரிவிக்கையில்இ ஒரு மாதத்திற்கு முதல் மட்டும் அஹ்வாஸி அறப் சிறுபான்மையினைச் சேர்ந்த மேலும் இரண்டு முஸ்லிம்கள் ஷீஆ மதத்தில் இருந்து மாறி சுன்னி நம்பிக்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ”பூமியில் குழப்பம் விளைவித்தார்கள்’ என குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச் சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

ஹுஸைன் சபூரி மற்றும் சமி ஷெபாதி ஆகிய இரண்டு சுன்னி பிரச்சாரகர்களும் ஷீஆ வணக்கஸ்தளம் ஒன்றினை தீயிட்டு கொழுத்தியதில் சம்பந்தப்பட்டார்கள் என ஈரானி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இருவரும் குற்றச்சாட்டுக்களை வலுவாக நிராகரித்துள்ளனர்.

ஈரானிய அதிகாரிகள் சுன்னி பிரச்சாரகா்களினதும்இ செயற்பாட்டாளர்களினதும் கைதுகளை நியாயப்படுத்தும் வகையில் அடிக்கடி போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். சில வழக்குகளில் ஒரே சம்பவம் டஷன் கணக்கான வெவ்வேறு சுன்னி செயற்பாட்டாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் நியாயப்படுத்தலாக பாவிக்கப்படுகிறது.

தீவிரமடையும் அடக்குமுறை
ஈரானிய மனித உரிமைகள் நிறுவனமான அப்துர் ரஹ்மான் பொரூமன்ட பவுன்டேசன் (யுடீகு) கடந்த 2012ம் ஆண்டிலிருந்து சுன்னி முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறை தீவிரமடைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. அப்போது 6 இளம் குர்திஷ் சன்னி செயற்பாட்டாளர்கள் ரஜாய் சஹ்ர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களது கொலையும் மூடிமறைக்கப் பட்டது.

அப்துர் ரஹ்மான் பொரூமன்ட பவுன்டேசனின் (யுடீகு) அவதானங்கள்:
ஈரானின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதமானோர் சுன்னி முஸ்லிம்கள் என கணக்கிடப் பட்டுள்ளனர். இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் 12வது சரத்துப்படி அவர்கள் அவர்களது மத நம்பிக்கைகளை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் நடைமுறையில் ஷீஆ ஆட்சியாளர்கள் சுன்னிக்களை பாகுபடுத்தியுள்ளதுடன் அரசாங்க இடங்களில் நுழைதல்இ வேலைவாய்ப்புஇ கல்விஇ வணக்கஸ்தலங்கள் என்பன மீதான கட்டுப்பாடுகள் மூலம் அவர்களது அரசியல்இ சிவில்இ பொருளாதாரஇ கலாச்சார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

”ஈரானில் மிகவும் வறிய பிராந்தியங்களான குர்திஸ்தான்இ துர்க்மென் சஹ்ராஇ சிஸ்டன்இ பலுசெஸ்தான் போன்ற இடங்களில் சுன்னிக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அத்துடன் சமமற்ற வளப்பங்கீடுஇ மத்திய அரசாங்கத்தின் புற்க்கணிப்புகள் காரணமாக அவர்களுக்கு மனக்குறையே எஞ்சி நிற்கின்றது.

பள்ளிவாயல்களில் நுழைய தடைவிதித்தல்.
சுன்னிக்களின் வணக்கஸ்தலங்களுக்கான மட்டுப்பாடுகளை விதிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது. புதிய பள்ளிவாயல்களை நிர்மானிப்பதற்கான அனுமதி மறுப்ப மற்றும் முக்கியமான சுன்னி மத நிகழ்வுகளின் போது பள்ளிவாயல்களில் நுழைய தடை விதித்தல் என்பன இதில் அடங்கும்.

”சர்வதேச மன்னிப்பு சபையின் 2008ம் ஆண்டின் ஓர் அறிக்கையின் பிரகாரம் தெஹ்ரானில் சுன்னி முஸ்லிம்களுக்கான ஒரு பள்ளியேனும் இல்லை என சுட்டிக் காட்டியுள்ளது’.

”சுன்னிக்களின் மார்க்க கல்வி நிறுவனங்களுக்கு பொதுவான தடை ஏற்படுத்தப்படுகின்ற அதேவேளைஇ ஷீஆக்களின் அவ்வாறான நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பும்இ ஆதரவும் அரசினால் வழங்கப்படுகிறது. நாட்டின் வேறு இடங்களில் காணப்படுகின்ற சுன்னி முஸ்லிம் பள்ளிவாயல்களை விஸ்தரிப்பதற்கும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது’.

சுன்னி இஸ்லாமியர்களின் செல்வாக்கு மற்றும் வளர்ச்சியினை கட்டுப்படுத்துவதே ஈரானிய அரசாங்கத்தின் நோக்காக காணப்படுகிறது. அத்துடன் சுன்னிக்களை ஷீஆ மதகுருமாரின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் தொழுவதற்கு ஊக்குவிக்கின்றனா். ஏனெனில் அவர்களின் மனநிலையினை ஷீஆ மதத்திற்குள் மாற்றலாம் என நம்புகின்றனர். இதில் அதிருப்தியடையும் சுன்னி மதகுருமார்களை தடுத்து வைத்தல்இ சிறையிலடைத்தல்இ நாடு கடத்துதல் அத்துடன் ”கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தார்கள்’ என்ற குற்றச் சாட்டின் கீழ் மரண தண்டனையும் வழங்குகின்றனர்.

தங்களது இஸ்லாம் பற்றிய பிரச்சாரங்களை ஊக்குவிப்பதனை தடை செய்வதை நோக்காக கொண்டே தங்களுக்கெதிரான அடக்குமுறைகள் காணப்படுவதாக அனேகமாக சுன்னிக்கள் நம்புகின்றனர். அத்துடன் சுன்னிக்களுக்கெதிரான அரசின் நியாயமற்ற நடவடிக்கைகள் மற்றும் மதம் அரசாங்கத்தினால் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அம்பலப்படுத்தல் பற்றிய விழிப்புனர்வுகளும் சுன்னிக்களிடையே அதிரித்து வருகின்றன.

SHARE