ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார்.
ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல் தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார்.