ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா

525
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஈரானும் போஸ்னியாவும் மோதின.

ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் போஸ்னியாவின் ட்செகோ அடித்த பந்தை ஈரானின் கோல் கீப்பரான ஹகிகி அற்புதமாக தடுத்தார். ஆட்டத்தின் 23வது ஓவரில் ட்செகோ மீண்டும் ஒரு கோல் அடித்து தான் இருப்பதை உறுதி செய்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் போது போஸ்னியா 2 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

சிறிது நேர இடைவெளிக்கு பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் போஸ்னியாவின் ப்ஜானிக் கோல் அடித்து அசத்த 82வது நிமிடத்தில் ஈரானின் ரெசா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

அடுத்த நிமிடத்திலேயே போஸ்னியாவின் வ்ரசாஜெவிக் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது போஸ்னியா. ஆட்ட நாயகனாக போஸ்னியாவின் ட்செகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE