இஸ்ரேலின் வாணிப கப்பலை கைப்பற்றிய ஈரானிய இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) அதனை முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் உள்ள தனது இராணுவ மையத்தை இஸ்ரேல் தாக்கியதற்குப் பழிக்குப் பழி வாங்குவதாக சூளுரைத்த ஈரான் MSC Aries எனும் இக்கப்பலை தனது கட்டு பாட்டில் கொண்டு வர ரஷ்ய தயாரிப்பான Mil Mi-17 எனும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளது.
போர்த்துக்கல் நாட்டுக் கொடியுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்ட இக்கப்பலில் 17 கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.