ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று

12

 

“நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர்.”
மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை.
ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று.
எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம்
ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு வந்துவிடும்…
இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் நீங்கள் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது.
வணக்கத்துக்குரிய எம் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்கள்
யுத்தகாலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை வழங்கியவர். தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.மனித உரிமை மீறல்களுக்காக போராடியவர். தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர்.
‘இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மையபீடத்தில் இருந்து வந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களின் விடுதலையை தனது இறையியல் சம்பந்தமான விளங்கிக் கொள்ளல்களோடு சேர்த்து நோக்கி மக்களின் சார்பில் குரல் தந்தவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.
ஒரு வகையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலை இறையியல் தத்துவார்த்தத்தை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார் எனக் கூடக் கூறலாம். இந்த நிலைப்பாடு காரணமாக அவருக்கெதிராக அரச இயந்திரம் குறிப்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஊடாக பல விசாரணைகளை முடுக்கி விட்டது.
அவரை பயங்கரவாதி என்றும் நாமம் சூட்டியது. அவற்றை பொருட்படுத்தாது தொடர்ந்து மக்கள் பணி ஆற்றினார்.
2012 இல் வழங்கிய பேட்டியொன்றில் ‘சர்ச்சைக்குரிய ஆயர்’ என அவர் சிலரால் அழைக்கப்படுவது பற்றி கேட்கப்பட்ட போது ‘இங்கு சர்ச்சைக்குரிய விடயங்கள் நடக்கின்றன. அவற்றை பற்றி பேச நான் துணிவதாலேயே சர்ச்சைக்குரிய ஆயர் என்று அழைக்கப்படுகிறேன்’ என உறுதியாக ஜோசப் ஆண்டகை பதில் கூறியமை அவரின் மனவலிமைக்கு சான்றாகின்றது’
ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்த ஆண்டகையை இந்நாளில் கண்ணீர்மல்க எமது நினைவு வணக்கத்தை காணிக்கையாக்குகின்றோம்.
SHARE