பாப்பாண்டவர், பாகிஸ்தான் சிறுமி மலாலா மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு உள்ளிட்ட தரப்பினரது பெயர்களும் சமாதான விருதிற்கான பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.
இந்த ஆண்டில் நோபல் பரிசு கிடைக்காவிட்டால், பதவிக் காலம் முடிவடையும் முன்னர் நோபல் சமாதான விருதினை பெற்றுத் தருவதாக பான் கீ மூனுக்கு ஆலோசகர் ட்ரேஜே ரியோட் லார்சன் (Terje Roed-Larsen) தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனுக்கு சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக விருது கிடைப்பதனை விடவும் காலநிலை மாற்றம் தொடர்பில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காகவே விருது கிடைக்க அதிக சாத்தியங்கள் காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், யுத்தங்களின் போது மத்தியஸ்தம் வகித்தல், பக்கச்சார்பற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதல், சமாதானத்தை ஏற்படுத்தல் போன்ற விவகாரங்களில் பான் கீ மூன் குறைந்தளவு வெற்றியையே பதிவு செய்துள்ளார்.
2009ம் ஆண்டு இலங்கையில் அரசாங்கம் பொதுமக்களை கொலை செய்த போது பான் கீ மூன் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் பான் கீ மூன் நோபல் வருது பெறுவதற்கான வாய்ப்பினை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே பலரும் கருதுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடமை தவறி செயற்பட்டதாகவும் இதனால் அவருக்கு நோபள் சமாதான விருது வழங்கப்படக் கூடாது எனவும் இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெய்ட்டியில் கொலரா நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை, பான் கீ மூன் அமெரிக்க இராஜாங்கக் கொள்கைகளையே அதிகம் பிரதிபலிக்கின்றார் என்பதனால் அவரை மத்தியஸ்தராக பார்க்க சிலர் தயாரில்லை.
சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்க பான் கீ மூனம் முழு அளவில் முயற்சி காட்டவில்லை. குறிப்பாக ஒர் கட்டத்தில் சிரிய அதிபர் பசல் அல் அசாடுடனான தொடர்புகளை அல்லது பேச்சுவார்த்தைகளை பான் கீ மூன் நிறுத்திக்கொண்டார்.
சிரியாவின் குர்திஸ் நகரை பாதுகாக்க இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அண்மையில் தெரிவித்த பான் கீ மூன், 2009ம் ஆண்டில் இலங்கைத் தமிழ் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்களை, அரசாங்கம் கொலை செய்த போது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பான் கீ மூன் மத்தியஸ்தவம் வகிக்கும் விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களில் தெரிவின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார்.
வடகொரிய தென்கொரிய பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஒருவேளை பான் கீ மூனுக்கு நோபல் சமாதான விருது வழங்கப்படலாம்.
எனினும் பான் கீ மூன் வட தென்கொரி விவகாரங்களில் ஒரு பக்கச்சார்பாக செயற்படுவதாகவே பலர் கருதுகின்றனர்.
எவ்வாறெனினும், இலங்கை மற்றும் ஹெய்ட்டி போன்ற விவகாரங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நோபல் விருது குழுவின் ஆலோசகர்கள் பான் கீ மூனுக்கு இப்போது ஆலோசனை வழங்குவதில் பயன் கிடையாது என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.