ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது,

508

 

ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது,இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை.2000px-Tamil_eelam_map.svg
முதலில் சிங்கள – தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம்வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள – பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்காட்டியும் மற்றவர்களை வந்தேறு குடிகளாகவும் துரத்தப்படவேண்டியவர்களாகவும் கதை கட்டமைக்கப்பட்டு காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இடையில் இவ்வுணர்வு தொய்யும் போதெல்லாம் யாராவது வந்துஎண்ணெய் ஊற்றி எரித்து விடுவார்கள். இன்றும் கூட தங்கள் வரலாற்று நூலாகச் சிங்களவர் அடையாளங்காட்டும் ‘மகா வம்சம்’ என்ற நூல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.முதலில் மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாகஅடையாளங்காட்டுதலே சுத்த காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமுமாகும். அப்படிப் பார்க்கப்போனால் இராமாயணம் மகாபாரதங்களைக்கூட யாரும் தமக்கேற்றபடி வரலாற்று நூற்களாகக் கட்டமைத்து எதையும் கதைக்க முடியும். காம வேட்கையுற்ற சிங்கமொன்றினால் உருவாக்கப்பட்டு ஒரே தாய்வயிற்றில் பிறந்த ஆண்-பெண் கூடி உருவாக்கப்பட்ட இனம் தான் இந்தச் சிங்கள இனமென்றும்,புத்தரால் அவர்களுக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீவுதான் இந்த இலங்கை என்றும், அவர்களை அங்கே குடியேற்றுவதற்காக ‘வாக்களிக்கப்பட்ட’ தீவிலிருந்தவர்களை புத்தர் வெருட்டிக் கலைத்தார் என்றும் கதை சொல்கிறதுமகாவம்சம். நிறைய மாயாஜாலச் சம்பவங்களைக் கொண்ட இந்நூல்தான் அவர்களின் வரலாற்று நூலாம். (இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பகுதிகளை வன்னியில் வாசித்தேன். முழு மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் வெளியிட்டுவிட்டார்களாதெரியவில்லை. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்)

இதன்பின் அவ்வப்போது தமிழர்களுக்கும் சிங்களவருக்குமிடையில் போர்கள் நடந்தன. போர்த்துக்கேய வருகைவரை தனித்தனி இராச்சியங்கள் இருந்துள்ளன. வெள்ளையரிடம் இறுதியாக இழக்கப்பட்ட இன்றைய மத்திய இலங்கையான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஒரு தமிழன் என்ற தகவல் வியப்பானது.
ஆகவே இந்த இனப்பிரச்சினையின் வேர் ஆயிரமாண்டுகளாக ஊட்டியூட்டி வளர்க்கப்பட்ட இனவெறியில் தங்கியுள்ளது. அதிகம் கிளறாமல் நான் சொல்லவந்த விசயத்துக்கு வருகிறேன்.

ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது எழுபதுகளில், அது முனைப்புப்பெற்றது எண்பதுகளின்தொடக்கத்தில். இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியான வன்முறைகளையும் அழிவையும் சந்தித்து வந்தார்கள். அவ்வப்போது நடந்த இனப்படுகொலைகள் (இனக்கலவரம் என்பது பிழையான சொல்லாடல்) இதற்குச் சான்று. அடக்குமுறைக்கு மொழி முக்கிய மூல காரணியானது. மொழி மூலமே முதன்மையான அடக்குமுறையை எதிர்கொண்டனர் தமிழர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முக்கிய விடயம். (அந்த நேரத்தில் எவன் தமிழனை அதிகமாக வதைக்கிறானோ, அல்லது வதைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறானோ அவனே தேர்தலில் வெல்வான் என்றநிலையிருந்தது. அதன் உச்சபட்ச தேர்தல் வாக்குறுதியே ’24மணிநேரத்தில் தனிச்சிங்களச் சட்டம்’ என்ற தேர்தல் கோசமும் அதைத் தொடர்ந்த வெற்றியும்.)

இந்த நேரத்தில் தமிழ் மாணவர்களை வதைக்கும், தமிழ் மக்களின் கல்வித்திறன் மேல்கைவைக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆயுதப்போராட்டப் பொறி பற்றுவதற்கான முதன்மைக்காரணியும் இதுவே. இச்சட்டம் குறிப்பாக இளம்தமிழ் மாணவரை நேரடியாகப் பாதித்தது. இச்சட்டம் மூலம் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு செய்த மோசடியும், அது எவ்வளவு தூரம் மாணவரைப் பாதித்தது என்பதையும் அது எவ்வாறு ஆயுதப்போராட்டத்துக்கு இட்டுச்சென்றது என்பதையும்அடத்த பதிவில் தருகிறேன்.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இனப்படுகொலைகள் பற்றி இங்கே எழுதத்தேவையில்லையென்று நினைக்கிறேன். சிங்களம் மட்டும் சட்டத்தின் கொடூர முகம் பற்றி வேறு யாரேனும்எழுதுங்களேன். நாங்கள் தான் வயதாற் சிறியவர்கள். புலிவிமர்சனத்தை மட்டும் கருப்பொருளாய் வைத்து பதிவு எழுதும் நேரத்தில் இப்படியாக ஆயுதப்போராட்டத்துக்கு முந்தைய நிலையினையும் நீங்கள் எழுதலாம் என எமதுமூத்தவர்கள் சிலரைக் கேட்கிறேன். புலியைப்பற்றி எழுதப்போனால் தான் உங்களுக்குச்சிக்கல். இனச்சிக்கல்களின் தொடக்ககாலத்தைப்பற்றி நீங்கள் எழுதலாம் தானே.

மாணவர்கள் மேல் பாய்ந்த அச்சட்டம் தான் தரப்படுத்தல் சட்டம்.
இச்சட்டத்தின்படி, பல்கலைக்கழகம் நுழைய வேண்டுமானால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது எல்லாப்பாடங்களுக்கும் பொருந்தும். கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்படும் புள்ளிகள் 1970 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழகம் புகவேண்டிதற்காகப்பெற்றிருக்க வேண்டிய புள்ளிகள்.

இதன்படிப்பார்க்கும்போது எவ்வளவு தூரம் தமிழ்மாணவர்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பது புரியும். பின்னர்,இத்தரப்படுத்தல் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டதாகஅறிகிறேன். இன்றிருக்கும் முறை தொடக்கத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

எழுபதுகளின் ஆரம்பத்தில் சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை தொடக்கப்பட்டது. அது படிப்படியாக மாற்றமடைந்து பல இயக்கங்கள் உருவாகின. 1972 இல் புதியதமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு உருவானது. பின் அது 1976 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரைப் பெற்றது.

ஆரம்பகாலங்களில் ஆயுத வழியிற்போராடப் புறப்பட்டவர்களில் முக்கியமானவர் பொன்.சிவகுமாரன். தான் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டார். பின் சிகிச்சை பலனின்றிவைத்தியசாலையில் இறந்தார். சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட முதலாவது போராளி பொன்.சிவகுமாரன் ஆவார்.

SHARE