உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில் முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
திறந்தவெளியில் காத்திருந்தவேளை தாக்குதல்
இந்த தாக்குதலில் பெருமளவு ரஸ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஸ்ய அதிகாரியொருவர் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சைபீரியாவை தளமாக கொண்ட படையணியின் படையினர் ட்ருடொவ்ஸ்கே கிராமத்திற்கு அருகில் உள்ள பயிற்சி தளத்தில் தளபதியொருவரின் வருகைக்காக திறந்தவெளியில் காத்திருந்தவேளை உக்ரைனின் ஏவுகணைகள் அவர்களை தாக்கியுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்த நிலையில் பல ரஸ்ய வீரர்கள் காணப்படும் காணொளகளும் வெளியாகியுள்ளது.