உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவம் வழங்கிய நிதி உதவி

555

 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து வரும் நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மிகவும் தேவையான இராணுவம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைன் பயணமாகியுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய Richard Marles, குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உதவிப் பொதியை ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் என்று கூறினார். உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா உறுதியாக ஆதரவளிக்கும் என்றார்.

SHARE