உக்ரைன் நாட்டில் போடோலியர்னட்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோனிட் ஸ்டாட்னிக். வயது44. இவரது உயரம் 8 அடி 4 அங்குலம். எனவே இவர் உலகின் மிக உயரமான மனிதர் என்ற சாதனை படைத்து இருந்தார்.
இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார். மிக உயரமாக இருந்ததால் அவர் கட்டிலில் படுத்து தூங்க முடியவில்லை.
பில்லியட்ஸ் விளையாட்டு மேஜையின் மீது படுத்து தூங்கி வந்தார். இவரது கால் பாதம் 18 அங்குலம் நீளமாக இருந்தது. அதே நேரத்தில் இவரது உள்ளங்கைகளின் அகலம் பாதத்தை விட அகலமாக இருந்தன.
அவர் உயிருடன் இருந்த போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர் இடம் பெற செய்ய உயரம் அளக்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் வெட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.