சிலி நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தங்களது நண்பர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புதிய பக்கத்தை பேஸ்புக் ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டில் நேற்று ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 10 பேர் பலியாகினர், சிறிய அளவில் சுனாமி அலைகளும் தாக்கியதால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தங்களது நண்பர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புதிய பக்கத்தை பேஸ்புக் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில், பேரழிவுகள் நடக்கும் போது மக்கள் தமது அன்புக்குரியவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
மேலும் இது போன்ற சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்க வேண்டியதும் அவசியம். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களின் பேஸ்புக் பக்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்று கேட்கப்பட்டு, பின்னர் அவர்களின் பதில் அவருடைய அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கான லிங்க்- https://www.facebook.com/safetycheck/chileearthquakesept2015