உங்களுக்கு தெரியுமா கடல் நீர் ஏன் உப்புகரிக்கிறது?

297

கடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் தாகம் எடுக்குதே என்று கடல் நீரை குடித்தால் குமட்டுகிற அளவுக்கு உப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.

உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில் இருக்காது.

கடல் எப்படி உருவானது?

ஆதி காலத்தில் பூமி உருவான போது, நிலப்பரப்புகள் மிகுந்த வெப்பத்தால் சூடாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நீராவிப்படலமானது பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சூழ்ந்திருந்தது.

பூமியானது எப்போது குளிர்ச்சி தன்மை அடைகிறதோ அப்பொழுதெல்லம் அங்குள்ள நீராவியும் குளிர்ந்து, பெரும் மழை பொழிவுகள் பூமியில் உண்டானது.

இந்த மழைப் பொழிவுகள் காரணமாக பெரிய பள்ளங்கள் மற்றும் நீர்கள் நிறைந்தது. நாளடைவில் இது பெரிய அளவில் உருவாகி கடலாக தோற்றமளித்தது.

கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?

நீர் சுழற்சி காரணமாக நதிகளில் உள்ள நீர்கள் கடலில் வந்து மோதுவதால், பாறைகள் நொறுங்கப்பட்டு அதிலுள்ள உப்புகள் கடல் நீரில் கலக்கின்றன.

பல வருடங்களாக இதே போன்றான நீர் சுழற்சி நடப்பதால், கடலில் உப்பின் தன்மை அதிகமாக காணப்படுகிறது.

மேலும் கடலில் இருந்து நீர் வெளியில் செல்வதற்கான ஒரே வழி, சூரிய வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் தான்.

இவ்வாறு நடைபெறும் போது கடலில் உள்ள நீர்கள் மட்டும் தான் ஆவியாகி மேலே செல்கின்றன. நீரில் உள்ள உப்புகள் மட்டும் கடலிலே தங்கி விடுகின்றன.

SHARE