உங்கள் சாதாரண் லேப்டாப்பினை டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்றவேண்டுமா?

222

இன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும், டேப்லட்டையும் (Tablet) பயன்படுத்தாதவர்கள் மிக குறைவு. நம் விரல்களால் ஸ்மார்ட் போன் திரையினை தொட்டே பழகிவிட்டோம்.

இதனால் சில சமயங்களில் நாம் பயன்படுத்தும் லேப்டாப் ஸ்கீரினை (laptop Screen) கூட தொட்டுவிட்டு அதன்பின்னர் அது ’டச்’ ஸ்கீரீன் (Touch Screen) அல்ல என்பதனை உணர்கிறோம்.

இத்தகையவர்களுக்காவே உருவாக்கப்பட்டது தான் Airbar. இந்த Airbar மூலமாக சாதாரண திரையினை கொண்ட லேப்டாப்பினை கூட நம்மால் தொடுதிரை கொண்ட லேப்டாப்பாக மாற்ற இயலும்.

ஆப்டிக் சென்சிங்கில் சிறந்த நிறுவனமான நியோனோட் நிறுவனமானது வெளியிட்டுள்ள இந்த ஏர்பாரானது கண்ணுக்கு புலப்படாத ஒளியினை உமிழ்ந்து, தொடுதலை உணர்ந்து, கணினிக்கு தெரிவிக்கும் ஆற்றலை உடையது. இதற்கு இந்ந்ரிறுவனமானது ஜீரோ ஃபோர்ஸ் சென்சிங் டெக்னாலஜி என பெயரிட்டுள்ளது.

இந்த ஏர்பாரில் இருபுறமும் உள்ள காந்தமானது இதை எளிதாக கம்ப்யூட்டருடன் பொருத்தப்பயன்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள USB யானது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பயன்படுகிறது. USB மூலமாக இணைப்பதால் நாம் பயன்படுத்ததாத நேரங்களில் இதனை எளிதாக நீக்கி விடலாம்.

மேலும், இதற்கு தேவையான ஆற்றலை கம்ப்யூட்டரில் இருந்தே பெற்று கொள்வதால் சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற பயம் இல்லை.

இந்த ஏரோபாரானது 13.4”, 14” மற்றும் 15.6” என்ற அளவுகளில் சந்தையில் கிடைத்தாலும் இந்தியாவில் 15.6” என்ற அளவில் தான் கிடைக்கிறது. இதன் விலை 7000 ரூபாய்.

ஆனால், இந்த ஏரோபாரானது விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை கொண்ட லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த இயலும்.

SHARE