உங்கள் சரும நிறத்திற்காக வண்ண உடைகளை அணிவதன் மூலம் உங்களின் தோற்றம் சிறப்பாக வெளிப்படும். மாறாக பொருந்தாத வண்ணங்களின் ஆடைகள் உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை மந்தமாக காட்டும்.
பொதுவாக வார்ம், கூல் மற்றும் நியூட்ரல் என்று மூன்று வகையான சருமம் உண்டு. வார்ம் நிறங்கள் மஞ்சள் நிறத்தை ஒத்தவையான இருக்கும். கூல் நிறங்கள் இளஞ்சிவப்பு நிறங்களை கொண்டிருக்கும். நியூட்ரல் நிறங்கள், வார்ம் மற்றும் கூல் என இரு வண்ணங்களின் கலவையாக இருக்கும். உங்கள் தோலின் மேற்பரப்பு தட்ப வெப்ப நிலையை பொறுத்து அதன் நிறத்தை மாற்றினாலும் சருமம் மாறாது,.
நம் சரும நிறத்தினை நரம்புகள் கொண்டு கண்டறியலாம். நீல நிற நரம்புகள் கூல் சருமத்தையும், பச்சை நிற நரம்புகள் வார்ம் சருத்தையும் பச்சை மற்றும் நீலம் கலந்த நிறத்தில் இருந்தால் நியூட்ரல் சருமத்தையும் குறிக்கும்.
கூல் சரும வகையை சேர்ந்தவர்கள் மரகத பச்சை, அடர் ஊதா, லாவெண்டர், இளஞ்சிவப்பு, வெளிர் மற்றும் அடர் நீலம் ஆகிய வண்ணங்களில் ஆடை அணியலாம்.
வார்ம் சரும வகையை சேர்ந்தவர்கள், வெளிர் மஞ்சள், ரோஜா சிவப்பு மற்றும் அடர் நீல நில ஆடை அணியலாம்.
நியூட்ரல் சரும வகையை சேர்ந்தவர்கள் , பிரகாரமான வெள்ளை, சாம்பல் மற்றும் கடல் நீலம் போன்ற ஆடைகளை உடுத்தலாம்.
மேலும் கூல் சருமத்தினர், தங்கம் அல்லது தாமிரத்தை விட பிளாட்டினம், வெள்ளி போன்ற குளிர்ந்த உலோகங்களை அணிகலன்களாக தேர்ந்தெடுப்பது நல்லது. இது உங்கள் சரும நிறத்துடன் இணைந்து சிறந்த தோற்றத்தை கொடுக்கும்.
வார்ம் சருமத்தினருக்கு எர்த் டோன்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அதில் பெரும்பாலும் பச்சை, பழுப்பு, கடுகு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் அடங்கும். தவிர பீச், பவளம், அம்பர் மற்றும் தங்கம், ஆலிவ், ஆர்க்கிட், வயலட்-சிகப்பு மற்றும் பாசி போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.
நியூட்ரல் சரும வகையினர், கிரீம், பழுப்பு, காளான் சாம்பல் மற்றும் கப்புசினோவை முயற்சி செய்யலாம்.