உங்கள் பித்த வெடிப்பு நீங்க ..

425

ஒவ்வொருவரும் தமது முகம் போல காலும் அழகாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். குறிப்பாக பெண்களுக்கே இப்படியான ஆசைகள் அதிகமாக இருக்கும். உண்மை தான் பித்த வெடிப்பு இருந்தால் பாதங்களின் இழகு கெட்டு விடும். அப்படி பித்தவெடிப்பு உங்கள் பாதங்களில் ஏற்பட்டால் அதனை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விடுங்கள்.

உங்கள் பித்த வெடிப்பு நீங்க இலகுவான முறை இதோ…

மெழுகுடன் சம அழவு கடுகு எண்ணை சேர்த்து கலந்து நன்கு குழைத்துக் கொள்ளவும். அதனை குதிக் கால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடிவி அதன் மீது லேசான துணி போட்டு பாதுகாக்க வேண்டும். இவ்வாறாக ஒரு வார காலத்திற்கு செய்து வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

கைப்பிடியளவு டிபடிகாரத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு நன்றாக பொரித்துக் கொள்ள வேண்டும். அது பாப் கார்ன் போல் நன்றாக பொரிந்து விடும். அதனை எடுத்து அதனுடன் ஒலிவ் அல்லது தேங்காய் எண்ணைய் தடவி வர பித்த வெடிப்பு விரைவில் குணமாகும். உங்கள் பித்த வெடிப்பு இடம் தெரியாமல் மறைந்து போகும்

SHARE