என்னதான் காலங்கள் உருண்டோடி புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தாலும் ஒருவரின் மனநிலையை பற்றி அறியும் எவ்வித கண்டுபிடிப்பகளும் இதுவரை வெளிவந்ததில்லை.
“சிலர் சிரிப்பர், சிலர் அழுவர், இன்னும் சிலர் சிரித்துகொண்டே அழுவர்”. இதில் எப்படி இன்னொருவரின் மனநிலையை அறிவது என்பது தான் உங்களுடைய கேள்வியாக இருக்கலாம்.
ஆனால் அதற்கான தொழிநுட்பம் வந்தவிட்டது என்பதுதான் ஆச்சிரியம். இதனை அமெரிக்காவின் “எம்.ஐ.டி” ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
EQ ரேடியோ எனும் இந்த கருவியின் மூலம் 87% துல்லியமாக மனிதர்களின் மனநிலையைக் கண்டறிய முடியுமாம்.
இந்த EQ ரேடியோவில் இருந்து வெளிப்படும் அலைகள் மனித உடலில் பட்டு மீண்டும் கருவியையே வந்தடையும்.
இந்த அலைகளின் எதிரொலிப்பு மனிதனின் இதய துடிப்பை கணக்கிட்டு அதன் மூலம் அவர் எந்த மனநிலையில் இருக்கின்றார் என்பதை காட்டிவிடும்.
எளிமையாக கூறபோனால் கருவியில் எதிர்மறை அலைகள் வந்தால் அவர் சோகமாக இருக்கின்றார் என்றும், நேர்மறை அலைகள் வந்தால் அவர் மகிழ்ச்சியாக இருக்கின்றார் என்றும் அர்த்தமாகும்.
இதனை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் டினா கடாபின் “வருங்கால தொழில்நுட்ப மாற்றத்திற்கு EQ ரேடியோ முதற்படியாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.