உங்கள் ஸ்மாட்போனில் உள்ள ஆப்ஸ் அடிக்கடி க்ராஷ் ஆகி உங்களை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறதா? இதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
உங்கள் போனில் நிறுவப்பட்டுள்ள ஆப் ஆனது பழைய பதிப்பாக இருக்கலாம் அல்லது ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்கள் பயணப்பாட்டில் இருக்கலாம்.
இந்த பிரச்சனையை தடுக்க எளிய வழிகளில் ஒன்றாக தேவையற்ற ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனில் தேவையான ஸ்பேஸ்தனை நீங்களே உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
க்ளியர் டேட்டா (Clear data) மற்றும் க்ளியர் கேட்ச் (Clear cache) ஆகிய இரண்டுமே அவ்வப்போது உங்கள் போனில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
அடிக்கடி புதிய வைஃபை அல்லது நெட்வொர்க் இணைப்புக்கு மாறும் ஆண்ட்ராய்டு பயனர்கள் அதிக அளவிலான இது போன்ற சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட ஆப் ஆனது கிட்டத்தட்ட அடிக்கடி க்ராஷ் ஆகிறது என்றால் யோசிக்காமல் அதை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அதை மீண்டும் நிறுவக் கொள்ளுங்கள்.
மறுமுறை அதே ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள புதிய அப்டேட் சார்ந்த விடயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.