உடம்பை கூலாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

428

பொதுவாக நம் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பது என்பது ஒரு பாதிப்பு. இது உடல்நலத்திற்கு கேடு என்றும் கூறலாம். ஏனெனில் அதீத வெப்பம் நம் சர்மத்தில் இருந்தால், அது உடலுக்கும் செரிமானத்தும் பல பக்கவிளைவுளை ஏற்படுத்தும்.

உடல் சூடாக இருக்க காரணங்கள் இறுக்கமான ஆடை  ஜுரம்  தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல் கடும் உழைப்பு நரம்புக் கோளாறுகள்

ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நாம் சில உணவு முறைகளை தீவிரமாக கடைபிடித்தால் உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

உஷ்ணத்தை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்

இளநீர் குடிக்க வேண்டும். கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும்.

ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம்.

காய்கறி உணவு சிறந்தது.

சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம்.

கொழுப்பற்ற தயிர் தினமும் உட்கொள்ளுங்கள்.

மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.

பழங்கள் உண்பது உடல் சூட்டினைத் தணியச் செய்யும்.

SHARE