உணர்ச்சிகளைக் கண்டறியும் இலத்திரனியல் கைப்பட்டி அறிமுகம்!

173

உடற்பயிற்சி, தூக்கம் போன்ற உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும் இலத்திரனியல் கைப்பட்டிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

ஆனால் முதன் முறையாக மனித உணர்ச்சிகளை கண்டறியக்கூடிய இலத்திரனியல் கைப்பட்டி ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

Ankkoro எனும் இச்சாதனமானது 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதியிலிருந்து 8ம் திகதிக்கு இடையிலான காலப் பகுதியில் இடம்பெறவுள்ள CES நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது ஒருவருடைய இயல்பை எடுத்துக்காட்டக்கூடியதாக இருப்பதுடன், உடனுக்கு உடன் மாறக்கூடிய உணர்ச்சிகளையும் கண்டறியக்கூடியதாக உள்ளது.

மேலும் பயம், மன அழுத்தம், அமைதி, ஆச்சரியம், அமைதி உட்பட 11 வகையான உணர்ச்சிகளை கண்டறியக்கூடியதாக காணப்படுகின்றது.

இச் சாதனத்தினை Ironova எனும் முன்னணி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

SHARE