உணவு பஞ்சத்தை சமாளிக்கும் அமெரிக்காவின் திட்டம்! இலங்கைக்கும் உதவும்!

325

உலகளாவிய உணவு பஞ்சத்தை சமாளிக்கும் வகையில், அமெரிக்க திறைசேரி முன்னெடுக்கும் இணை திட்டத்தின் மூலம் இலங்கையும் பயன் பெறவுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 பில்லியன் ரூபா நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, கடந்த வியாழன் அன்று பெர்லினில், ஜி7 நாடுகள் ஒன்றிணைந்து பஞ்சம் ஏற்படும் நெருக்கடியைச் சமாளிக்க உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய கூட்டணியை ஆரம்பித்துள்ளன.

உணவு பஞ்சத்தை சமாளிக்கும் அமெரிக்காவின் திட்டம்! இலங்கைக்கும் உதவும்!

இந்த திட்டத்துக்கு இணங்க,. உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு உதவியளிக்கவுள்ளது.

உலக வங்கியும் அடுத்த 15 மாதங்களுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான திட்டங்களைத் தயாரித்து வருகிறது,

இதன் மூலம், விவசாயத்திற்கு ஆதரவு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நீர் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக தெற்காசியாவிற்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளன.

சர்வதேச நாணய நிதியமும், உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அதன் நுண் பொருளாதார நிபுணத்துவத்தின் ஊடாக உதவியளிக்கவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள், அத்தியாவசிய உணவு இறக்குமதிக்கு உதவவுள்ளன.

உணவு பஞ்சத்தை சமாளிக்கும் அமெரிக்காவின் திட்டம்! இலங்கைக்கும் உதவும்!அதே நேரத்தில் இலங்கை உட்பட 15 வளரும் நாடுகளில் செயற்படும் 2,800 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை உள்ளடக்கிய உணவு மற்றும் விவசாய வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக, அந்த நாடுகளின் வங்கிகளுக்கு நிதி உத்தரவாதத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

இதன்கீழ் இலங்கை உட்பட 15 வளரும் நாடுகளில் உள்ள 300,000 சிறு விவசாயிகளுக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விவசாய வணிகக் கடன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE