சமூகவலைதளங்களில் முன்னணி வகிப்பது பேஸ்புக் தான், இதில் பலவகையான புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது புதிதாக சினிமா படங்களுக்கு டிக்கெட் புக் செய்வது, இருந்த இடத்திலிருந்தே உணவை ஆர்டர் செய்வது போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதியானது தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை எப்படி செய்வதென்றால், நாம் ஒரு பீட்சாவை ஆர்டர் செய்ய வேண்டுமென்றால் பேஸ்புக் ரெஸ்டாரண்ட் பேஜ்க்கு சென்று ‘Order’ என்ற பட்டனை அழுத்தினால் போதும் அதன் செயல் தொடங்கி விடும்.
இதன் மூலம் சினிமா படங்களுக்கு டிக்கெட் புக் செய்வது, பியூட்டி பார்லரில் அப்பாயிண்ட்மண்ட் பிக்ஸ் செய்வது போன்றவற்றையும் செய்யலாம். பேஸ்புக் மெசன்ஜர் மூலம் நம்மை அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
இதற்காக பேஸ்புக் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள Ticketmaster, Eventbrite பேஜ் மூலமும் நாம் எந்த நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் வாங்கலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களின் கேள்விகள், கோரிக்கைகள், கருத்துகளை இந்த விடயத்தில் கூறலாம் எனவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.