உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் கூகுளின் அதிரடி வசதி

215

முன்னணி இணையத் தேடல் நிறுவனமான கூகுள் தனது பயனர்களுக்கு செய்திகளை அறிந்துகொள்ளும் வசதியையும் வழங்கிவருகின்றமை அனைவரும் அறிந்ததே.

தற்போது இச் சேவையின் ஊடாக நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்தும் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதவாது வெளியிடப்படும் செய்திகள் உண்மையானவையா என்பதை ஏனைய இணைய செய்தி சேவைகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் வசதியே அதுவாகும்.

இதன் ஊடாக கட்டுக்கதைகள் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை பயனர்கள் தவிர்க்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் செய்தி சேவைக்கு தலைமை வகிக்கும் Richard Gingras என்பவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை முன்னணி செய்தி நிறுவனங்களும் இச் சேவைக்கு தமது விண்ணப்பங்களை வழங்குவதன் ஊடாக கூகுளின் தேடல் வசதியில் இடம்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

google

SHARE