எவரெஸ்ட்டுக்கு புகழ் உலகிலேயே உயரமான மலை என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல.
ஆம், உலகின் உயர்ந்த மலை உண்மையில் சிம்போராசோ மலை தான். இது ஆண்டிஸ் மலைத்தொடரிலுள்ள ஈக்வடார் எரிமலைகளில் ஒன்று.
இதுவே புவியின் மையத்திலிருந்து அதிகப்பட்ச தூரத்தை கொண்டுள்ளது.
Eli Rosenberg அவர்களில் தகவல்களின் படி, சிம்போராசோ மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 20,500 அடி (6,248 Metres).
இது எவரெஸ்டிலும் 8,529 அடியால் (2,600 Metres)சிறியது. ஆனால் இத் தூரங்கள் மையத்திலிருந்து அளக்கப்படும் போது மாறுகின்றன.
பூமி தட்டையானதல்ல. இது மத்திய கோட்டுப்பகுதியில் வீக்கத்துடன் காணப்படுகிறது. துருவங்களில் தட்டையாகிறது.
இதனால் மத்திய கோட்டுப் பகுதியில் காணப்படும் மலைகள் உயரமாக தெரிகின்றது. இதுவே இரு மலைகளினதும் உயரம் வேறுபடக் காரணம், அவைகளின் அமைவிடம் காரணமாக.
அறிக்கைகளின் படி, எவரெஸ்டின் உயரம் புவியின் மையத்திலிருந்து 3,965 மைல்களும் (6,382 kilometres), அதேநேரம் சிம்போராசோ மலையின் உயரம் புவியின் மையத்திலிருந்து 3,967 மைல்களும் (6,384 kilometres) என தெரிய வருகிறது.
உண்மையில் இந்த இரண்டு மைல்(3.2 km) வித்தியாசம் போதும் சிம்போராசோ மலைதான் உயரம் என்று சொல்ல.