உதடுகளுக்கு அழகூட்டும் லிப்ஸ்டிக்! பெண்களின் கவனத்திற்கு

549
உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.உதடுகளு‌க்கு கூடுத‌ல் அழகூ‌ட்ட நா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் ‌லி‌ப்‌ஸ்டி‌க்கை ச‌ரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

இல்லையேல் அழகையே கெடுத்துவிடும். உங்களுக்கான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

லி‌ப்‌ஸ்டி‌க்கை தே‌ர்வு செ‌ய்யு‌ம் போது உ‌ங்க‌ள் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் பா‌ர்‌த்து வா‌ங்கு‌ங்க‌ள்.

விலை ம‌லிவானவைகளை வா‌ங்கவே வா‌ங்கா‌தீ‌ர்க‌ள். அவைக‌ள் உ‌ங்க‌ள் வா‌ய்‌‌க்‌கு‌ள் செ‌ன்று ‌பிர‌ச்‌சினைகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

மெ‌ல்‌லிய ‌நிற‌த்தை‌ப் பய‌ன்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌‌லி‌ப்‌ஸ்டி‌க்கை‌ப் போ‌ட்ட ‌பி‌ன் லி‌ப் ‌‌கிளா‌ஸ் பய‌ன்படு‌த்‌‌தினா‌ல் எடு‌ப்பாக இரு‌க்கு‌ம்.

லி‌ப்‌ஸ்டி‌க்கை போடுவத‌ற்கு மு‌ன்ன‌ர் அதே ‌நிற‌த்‌திலான ‌லி‌‌ப்‌ஸ்டி‌க் லைன‌ரை‌க் கொ‌ண்டு உ‌ங்க‌ள் உதடுக‌ளு‌க்கு அவு‌ட்லை‌ன் கொடு‌த்து‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த கோடுகளு‌க்கு‌ள் ‌லி‌ப்‌ஸ்டி‌க் போடு‌ங்க‌ள். ‌

லிப் லைனர் பயன்படுத்தும்போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுகளுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரியதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

* சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.

* மாநிறப் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.

* உதடு பெரிதானவர்கள், சின்ன உதடாக உள்பக்கம் வரைந்து, அதில் லிப்ஸ்டிக் பூச வேண்டும்.

* இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி, அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும்.

* லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டுஇழுக்கக் கூடாது.

உதடு வெடிப்பு குணமடைய

அதிக குளிரோ, அதிக வெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.

மேலும், சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெய் உடன் ஆரஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவிவந்தால், வெடிப்புகள் சரியாக உதடுகள் மென்மையாகும்.

SHARE