உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு

484

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் இன்றைய தினம் தம்மை பின்தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் நீதிமன்றிலிருந்து திரும்பிய போது இனந்தெரியாத மோட்டார் சைக்கிள்தாரிகள் தம்மை பின்தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடக சந்திப்புக்களை நடாத்துதல், ஊடக அறிக்கைகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பின்னரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமது காரியாலயம் வரையில் மோட்டார் சைக்கிளில் வந்தர்கள் பின்தொடர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

SHARE