உயிருக்கு போராடிய உடன்பிறந்த சகோதரன்… எப்படி காப்பாற்றியது தெரியுமா இந்த குழந்தை?..

685

 

அமெரிக்க நாட்டில் உயிருக்கு போராடிய தனது சகோதரனை 2 வயது சிறுவன் ஒருவன் காப்பாற்றியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் இரண்டு வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரட்டையர் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். சிறுவர்களின் தாயார் வேலை நிமித்தமாக மேல் மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது இரட்டையர்களில் ஒருவன் அங்குள்ள பீரோ ஒன்றின் மீது ஏற முயற்சி செய்துள்ளான். இருவரும் எதிர்பாராத நிலையில் பீரோ திடீரென சாய்ந்துள்ளது. இதில் இரட்டையர்களில் ஒருவர் பீரோவுக்கு கீழ் சிக்கி வலியால் துடித்துள்ளான்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த சகோதரன் அவனை காப்பாற்று அங்கும் இங்கும் சுற்றி திரிகிறான். பின்னர், பீரோ மீது ஏறி மறுப்பக்கம் சென்று ஏதாவது வழி உள்ளதா எனப் பார்க்கிறான்.

சகோதரனை காப்பாற்ற வழி இல்லாததால் வெறும் கைகளால் பீரோவை தூக்க முயற்சி செய்துள்ளான். ஆனால், அது முடியாத காரணத்தினால் பீரோவை பின்புறமாக பலம் கொண்டு தள்ளியுள்ளான். இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட சகோதரன் பீரோவுக்கு கீழ் இருந்து உருண்டு வெளியே தப்பி விடுகிறான்.

படுக்கை அறையில் உள்ள கமெராவில் பதிவாகியுள்ள இக்காட்சிகளை பெற்றோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில், வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், சில நேரங்களில் அவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE