உயிரை குடிக்கும் உப்பு

459
சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் உப்பு சேர்ப்போம்.ஆனால் உப்பை அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தீமைகள்

ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும்.

அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பானது, வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும்.

உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத் தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும்.

உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால், உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகு வலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். சிலருக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படும்.

இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம்.

மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது.

கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் துரித உணவு வகை களில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது.

இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது.

SHARE