உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலினால் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான விசேட திருப்பலி பூஜை இடம் பெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மன் திலகரட்ண அடிகளார் தெரிவித்தார்.
இந்த திருப்பலி ஆராதனை கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் பொரளையில் அமைந்துள்ள பேராயரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்வுள்ளது.
அதன்போது குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களுக்காவும்,படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களுக்காகவும் விசேடவிதமாக பிராத்தனைகள் இடம்பெறவுள்ளன.