உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது.
இதனை முன்னிட்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில், பாப்பரசரின் பிரதிநிதியான கர்தினால் பெர்னான்டோ பிலோனியின் பங்குபற்றலுடன் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று புதன்கிழமை விஷேட நினைவு திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்த ஆராதனையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, கொழும்பு மாநாகர மேயர் ரோசி சேனாநாயக்க, பாதுகாப்புத்துறை பிரதிநிதி அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன மற்றும் இராணுவ தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற நேரமான காலை 8.45 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகின. இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர்.