உறைந்துபோன ஏரியில் உயிருக்கு போராடிய குழந்தை துணிந்து செயல்பட்ட இளைஞர்கள்..!! (வீடியோ)

1030

சீனாவில் கடும் பனிப்பொழிவால் உறைந்துபோன ஏரியில் சிக்கிய குழந்தையை மீட்க இளைஞர்களும் இளம்பெண்களும் போராடிய சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

ஏரியில் சிக்கிய குழந்தையை மீட்க நபர் ஒருவர் குதிக்கவும், அவரைத் தொடர்ந்து டசின் கணக்கில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோர் ஒன்று திரண்டு குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தங்‌ஷான் நகரில் அமைந்துள்ள ஏரி ஒன்றிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

கடும் பனிப்பொழிவால் உறைந்துபோயுள்ள குறித்த ஏரியில் பனிப்பாளங்கள் உடைந்து விழும் அபாயம் இருந்தும், அந்த ஆபத்தை பொருட்படுத்தாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை உறைந்து போன ஏரியில் குடும்பத்தாருடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஐஸ் பாளம் உடைந்து அந்த ஏரியிக்குள் குழந்தை மூழ்கி இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அப்பகுதி மக்கள், ஆபத்தான காயங்கள் எதுவும் இன்றி குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

இதில் பொலிசாரின் உதவியோ அல்லது மீட்பு குழுவினரின் இதவியையோ பொதுமக்கள் நாடவில்லை.குழந்தை விபத்துக்குள்ளான பகுதியில் காலநிலையானது -3 டிகிரி செல்சியஸ் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE