உலகக்கிண்ணத்தை வென்றதை கௌரவமாய் கொண்டாடுவோம்! இலங்கை கிரிக்கெட் வெளியிட்டப் பதிவு

154

 

இலங்கை அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் ஆனது குறித்து அணி நிர்வாகம் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாம்பியன் ஆனது.

இறுதிப்போட்டியில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது.

இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளது.

அதில், ”2014 உலகக்கிண்ண மாபெரும் வெற்றியின் பத்து வருடங்கள்! உலகப்பார்வையில் இருப்பது நமது அணியின் பெருமை. உலகக்கிண்ணத்தை நம் வசப்படுத்தியதை கௌரவமாய் கொண்டாடிடுவோம்” என கூறியுள்ளது.

SHARE