உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து 3வது இடம் பிடித்தது

552
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற 3வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணி கடுமையாகப் போராடியது. ஆனால் அவர்களின் கோல் முயற்சியை நெதர்லாந்து வீரர்கள் தவிடுபொடியாக்கினர். இறுதியல் கூடுதலாக தரப்பட்ட நிமிடங்களிலும் நெதர்லாந்து அணி 1 கோல் அடித்து 3வது இடம் கைப்பற்றியது.

நெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் தலா ஒரு கோல் அடித்தனர். 3 வது இடம் பிடித்த நெதர்லாந்து அணிவீரர்களுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.

SHARE