உலகமே எதிர்பார்த்திருக்க, உதயமான ஐபோன் 6-எஸ், மற்றும் 6 எஸ்-ப்ளஸ்: சிறப்பு வீடியோ

376
அகில உலகிலும் முக்கியமாக கருதப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிள் நிகழ்ச்சியில், புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பு வருமா? அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதுதான்.அகில உலகிலும் நேற்று முக்கியமாக கருதப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிள் நிகழ்ச்சியில், புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பு வருமா? அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதுதான்.

இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் மேடையேறிய குக், ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி என்று அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அங்கு கூடியிருந்தவர்களோ ஐ போன் அறிவிப்பிற்காகவே தவம் கிடந்தனர். அந்த அறிவிப்பு வெளியாகும் தருணமும் வந்தது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் என்று பார்வையாளர்களின் பலத்த கைதட்டலுடன் ஐ போன் அறிமுகத்தை தொடங்கிய குக், “உலகில் பலரால் காதலிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தரும், ஐபோன் வரலாற்றிலேயே அதிநவீன போனை இன்று வெளியிடப் போகிறோம் இதற்காக நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்” என்றார்.

ஐபோன் 6 எஸ்-ன் சிறப்பம்சங்கள்:

* 4.7 இஞ்ச் திரைஅளவு

* 8 மெகா பிக்சல் ஐசைட் கேமரா

* 3டி டச் தொடு திரை வசதி கொண்டது.

* 150 Mbps வேகம் கொண்ட LTE தொழில்நுட்பம்

* 10 மணி நேர பேட்டரி பவர்

* ஐ.ஓ.எஸ். 9 வசதி இதில் உள்ளது.

* வலிமையான கவர் கிளாஸ்

ஐ போன் 6 எஸ் ப்ளஸ் மாடலின் சிறப்பம்சங்கள்:

* 5.5 இஞ்ச் திரை

* 3டி டச் தொடு திரை வசதி கொண்டது.

* ஐ.ஓ.எஸ். 9 வசதி இதில் உள்ளது.

* இதில் செயல்படுவது A 9, 64 பிட் சிப்பாகும்.

* புதிய ஐ சைட் கேமரா 12 மெகா பிக்சல் துல்லியம் கொண்டது.

* 4 K அளவு குவாலிட்டி கொண்ட வீடியோவை இதில் பார்க்கலாம்

* புகைப்படத்தைக் கூட சில நொடி வீடியோவாக பதிவு செய்யும் Live Photos வசதி

* அதி நவீன LTE தொழில்நுட்பம், மற்றும் அதி வேக வை-பை வசதி

* 5 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமரா, ரெட்டினா ப்ளாஷூடன்

இரண்டுமே, ஐஓஸ் 9 இயங்குதளத்திலும், (Soft ware) A9 processor மற்றும் M9 co-processor இலும் இயங்கக் கூடியது. இந்த A9 processor இதற்கு முந்தைய processor விட 70 மடங்கு வேகமானது. இரண்டு புதிய ஐ போன்களையுமே வருகிற செப்டம்பர் 12-ம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 25 முதல் இவை கடைகளில் கிடைக்கும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் 2 வருட திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மேலும் மாதம் 27 மற்றும் 31 டாலர் செலுத்தி, முறையே ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் மாடலை இன்ஸ்டால்மென்டில் வாங்கும் திட்டத்தையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் ஆப்பிள் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் புதிய மென்பொருளான ஐஓஎஸ் 9 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மென்பொருளை எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய ஆப்பிள் போன்களின் அறிமுக விழா வீடியோவாக:

SHARE