உலகளவில் முதன்முறையாக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை

110

 

உலகிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ரோஹித் சர்மா ஏற்கனவே முதலிடத்தில் உள்ள நிலையில் மற்றொரு சாதனையை படைக்கவுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2007 -ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் அடிக்கும் சிக்ஸர் மூலம் அவருக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இதனால், இந்திய ரசிகர்களால் ‘ஹிட்மேன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், மார்ச் 7 முதல் தரம்சாலாவில் தொடங்க உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 -வது டெஸ்ட் தொடரின் மூலம் ரோஹித் சர்மா மற்றொரு சாதனையை படைக்க முடியும்.

இன்னும் 6 சிக்ஸர்கள் தான்
ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 594 சிக்சர்களை அடித்துள்ளார். இன்னும் 6 சிக்ஸர்களை அடித்தால் 600 சிக்ஸர்களை பெற முடியும்.

இவர், 262 ஒருநாள் போட்டிகளில் 323 சிக்ஸர்களும், 58 டெஸ்ட் போட்டிகளில் 81 சிக்ஸர்களும், 151 டி20 போட்டிகளில் 190 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மேலும், உலகிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

இதனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பெறுவதற்கு ரோஹித் முயற்சி செய்து வருகிறார்.

மற்றொரு சாதனை
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 -வது டெஸ்ட் தொடரின் மூலம் ரோஹித் சர்மா மற்றொரு சாதனையை படைக்க முடியும்.

அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 சிக்ஸர்கள் என்ற கணக்கை எட்ட இன்னும் ஒரு சிக்ஸர் மட்டும் தேவையாக உள்ளதால் அதையும் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஹித் சர்மா 49 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்னும் 10 சிக்ஸர்கள் அடித்தால் இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெறுவார்.

SHARE